Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உணவகத்தின் குளியலறை தான் சமையலறையா? சவுதி அரேபியாவில் அதிர்ச்சி!

    உணவகத்தின் குளியலறை தான் சமையலறையா? சவுதி அரேபியாவில் அதிர்ச்சி!

    உணவகம் என்றாலே சுவையான உணவு தான் அனைவருக்கும் நினைவு வரும். ஆனால், உணவகங்களின் சமையலறை சுத்தமாக இருக்கிறதா என்று கேட்டால் யாருக்கும் உண்மை நிலவரம் தெரிவதில்லை. ஆம், பல உணவகங்களில் உள்ள சமையலறைகள் மிகவும் அசுத்தமாகவே உள்ளது. அதற்கு தகுந்தாற்போல சவுதி அரேபிய நாட்டில், ஒரு உணவகத்தின் சமையலறைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில், கடந்த 30 வருடங்களாக உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்ந நிலையில், நகராட்சி அதிகாரிகளுக்கு உணவகம் அசுத்தமான நிலையில் உள்ளதாக இரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இந்த தகவலை வைத்து, அவர்கள் உணவகத்தை ஆராயச் சென்றனர். அப்போது அவர்களுக்கு, சற்றும் எதிர்பாரா விதமாக ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சமோசா உள்ளிட்ட பிற உணவுப் பொருட்கள், உணவகத்தின் குளியலறையில் இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் பேரதிர்ச்சி அடைந்தனர். விசாரித்த பிறகு தான் தெரிந்தது, உணவுப் பொருட்கள் குளியலறையில் தான் தயாரிக்கப்படுகிறது என்று.

    மதிய உணவு உட்பட மற்ற அனைத்து உணவுகளும், அதே குளியலறையில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், காலாவதியான தரமில்லாத இறைச்சிகள் மற்றும் பாலாடை கட்டிகளும் உணவகத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளதை நகராட்சி அதிகாரிகள் கண்டறிந்தனர். இதில், மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், அங்கிருந்த சில உணவுப் பொருட்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியாகி விட்டன. பூச்சிகளும், எலிகளும் உணவகத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருப்பதையும் அதிகாரிகள் பார்த்துள்ளனர். 30 வயது நிரம்பிய உணவக ஊழியர்களிடம், சுகாதார அட்டையும் இல்லை. இதனையடுத்து உணவகம், நகராட்சி அதிகாரிகளால் பூட்டப்பட்டது.

    மிகவும் அசுத்தம் நிறைந்த உணவகம் மூடப்படுவது, சவுதி அரேபியாவில் இது முதல் முறையல்ல. கடந்த ஜனவரி மாதம், இதே ஜெட்டா நகரில் உள்ள ஷவர்மா உணவகத்தில் எலி ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. இந்த உணவகத்தில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், சமூக வலைதளங்களில் கொதித்தெழுந்தனர். உடனடியாக, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரால் வலியுறுத்தப்பட்டது.

    மக்களின் கோரிக்கைகளை ஏற்று, அதிகாரிகள் உணவகத்தை மூடினார்கள். பின்னர், பதிலளித்த சவுதி அதிகாரிகள், பல்வேறு இடங்களில் 2,833 ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர். அதில் ஏறக்குறைய 43 முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் சுத்தமும், தரமும் இல்லாத 26 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை; ஒடிசா அரசு செய்த காரியம் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....