Friday, April 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'கே.ஜி.எஃப் வில்லன் இப்போது விஜய்க்கும் வில்லன்' - வெளிவந்த அதிரடி அறிவிப்பு!

    ‘கே.ஜி.எஃப் வில்லன் இப்போது விஜய்க்கும் வில்லன்’ – வெளிவந்த அதிரடி அறிவிப்பு!

    கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் மிரட்டிய பிரபல பாலிவூட் நடிகர் சஞ்சய் தத் ‘தளபதி-67’ திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறரா். இப்படத்திற்கு தற்காலிகமாக, ‘தளபதி-67’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  தளபதி-67 குறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்புகள் நேற்று வெளியானது. இதனால், சமூகவலைதளங்களில் ‘தளபதி-67’ என்ற ஹாஷ்டேக் அதிகளவில் டிரெண்ட் ஆனது.

    ஆனால், இத்திரைப்படத்தின் நடிகர் நடிகைகள் குறித்து எந்தவித தகவலையும், படக்குழு வெளியிடாமல் இருந்து வந்தது. இருப்பினும், தளபதி 67 படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, பிரியா ஆனந்த் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

    இந்நிலையில், தற்போது படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ஆதிராவாக நடித்து அனைவரையும் மிரட்டிய பிரபல பாலிவூட் நடிகர் சஞ்சய் தத் ‘தளபதி-67’ திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இப்படத்தில் நடிப்பது குறித்து சஞ்சய் தத் தெரிவித்த கருத்து ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி,  ‘தளபதி-67’ படத்தின் ஒன் லைன் கேட்ட மாத்திரத்திலேயே நான் இந்த திரைப்படத்தில் ஒரு பங்காக இருப்பது குறித்த முடிவை எடுத்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார். இத்துடன், இந்த பயணத்தை ஆரம்பிப்பதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன் என்றும் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ‘தளபதி-67’ படக்குழு படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்றது குறிப்பிடத்தக்கது.

    கடற்கொள்ளையரால் சுடப்பட்ட தமிழக மீனவர்; அச்சத்தில் மீனவர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....