Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக சந்தியா தேவநாதன் தேர்வு

    மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக சந்தியா தேவநாதன் தேர்வு

    மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 

    பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டா இந்திய பிரிவு தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக இருந்த அஜித் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஸ்நாபல் என்ற நிறுவனத்திற்கு சென்றுவிட்டதன் காரணமாக, தற்போது சந்தியாவுக்கு இந்த பதவி கிடைத்துள்ளது. 

    இந்த நிறுவனத்தின் வணிகம் மற்றும் வருவாயை பெருக்குவதர்க்கான பணிகளில் சந்தியா கவனம் செலுத்துவார். வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அவர், புதிய பதிவுக்கு மாறுவார் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கான புதிய தலைவராக சந்தியாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக மெட்டாவின் தலைமை வணிக அதிகாரி மார்னே லெவின் குறிப்பிட்டுள்ளார்.

    சந்தியா கடந்த 2016 ஆம் ஆண்டு மெட்டாவில் இணைந்தார். இவர் சிங்கப்பூர், வியட்நாம் நாடுகளின் மெட்டா நிறுவனத்தின் வணிக பிரிவுகளை கவனித்து வந்தார். 

    அதேபோல் சந்தியா தென்கிழக்கு ஆசியாவில் மெட்டா நிறுவனத்தின் இ-காமர்ஸ் முயற்சிகளையும் உருவாக்க உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகும் காந்தாரா; ரிலீஸ் தேதி அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....