Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்புதின் தந்திரத்தால் பெய்யும் குண்டு மழையால் மனித பேரழிவு நடைபெறும் நாடாக உக்ரைன்!

    புதின் தந்திரத்தால் பெய்யும் குண்டு மழையால் மனித பேரழிவு நடைபெறும் நாடாக உக்ரைன்!

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், தீவிரம் என்ற நிலைக்கு சற்றும் குறையாமல் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் உடனான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக ரஷ்யா கூறி வந்தாலும், பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான சுவடே தெரியாத அளவுக்குத்தான் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. 

    war

    வளத்தை அழித்தல் 

    உக்ரைனின் முக்கிய நகரங்கள் தங்களின் வளத்தை அடியோடு இழக்கும் அளவிற்குத்தான் போர் சூழல் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. ஏவுகணை, குண்டுவீச்சு என ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியுபோல், கார்கீவ், லிவிவ் போன்ற நகரங்கள் ரஷ்யாவின் தீவிரத்தாக்குதலுக்கு இரையாகி வருகின்றன. 

    war

    மேலும், மேற்சொன்ன நகரங்களில் ரஷ்யா குண்டுகளை மழையாக பொழிய செய்த வண்ணம் உள்ளன. உக்ரைன் அரசின் கூற்றுப்படி மரியுபோல் நகரில் மட்டுமே நூறு குண்டுகள் வீசப்பட்டதாக தெரிகிறது. உலகிற்கு தேவையில்லாமல் பெய்த இந்த குண்டு மழையால் 1500 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மரியுபோல் நகரில் மனித பேரழிவு 

    டிமிட்ரோ குலேபா

    வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது ட்விட்டர் பக்கத்தில், மரியுபோல் நகரம் இப்போது மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், அங்கு நடைபெறுவது மனித பேரழிவு என்றும் குறிப்பிட்டுள்ளார். 12 நாட்களில் 1582 பொதுமக்கள் இறந்ததையும், இறந்த பொதுமக்கள் ஒன்றாக புதைக்குழிகளில் புதைக்கப்பட்டதையும் அவர் தெரிவித்தார். மேலும் உக்ரேனிய ராணுவத்தை தோற்கடிக்க முடியாமல், புதின் நிராயுதபாணி மீது குண்டுகளை வீசுகிறார் என்றும், உக்ரைனுக்கு வரும் உதவியைத் தடுக்கிறார் என்றும் போர்க்குற்றங்களை நிறுத்த விமானங்கள் தேவை என்றும் டிமிட்ரோ குலேபார தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு உதவ முன்வரும் நாடுகளை புதின் தன் தந்திரத்தால் உதவ முடியாதபடி நிகழ்வுகளை அரங்கேற்றி விடுகிறார். 

    died

    ஏவுகணை தாக்குதல் 

    அதோடு, லிவிவ் நகருக்கு அருகே உள்ள ராணுவ தளத்தைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் உக்ரைனை போரில் பின்னுக்குத்தள்ளக்கூடிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏவுகணை தாக்குதலை பொறுத்தவரையில், ரஷ்ய ராணுவம் மொத்தம் 8 ஏவுகணைகளை அனுப்பி உள்ளது. இந்த தாக்குதலினால் 35 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

    இப்படியாக ரஷ்யாவின் தாக்குதல்கள் வீரியம் அடைந்து வருகிற நிலையில், இன்று காணொளி வாயிலாக போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன் – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....