Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாரஷ்யா- உக்ரைன் போரால் பஞ்சம் : இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பு இதுதான்!

    ரஷ்யா- உக்ரைன் போரால் பஞ்சம் : இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பு இதுதான்!

    ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் உலகின் பல நாடுகளில் உணவுப்பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

    நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ஒரு மாதத்தினைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தாக்குதல்களால் அங்குள்ள மக்கள் பஞ்சம், பசி மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டு அந்நாட்டை விட்டு அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். 

    இந்த தாக்குதல்களை கட்டுப்படுத்த ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜி7 நாடுகள் பொருளாதாரத்தடை விதித்தன. இதனால் ரஷ்யாவும் பொருளாதார அளவில் பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் பொருளாதாரத் தடை விதித்த நாடுகளும் எரிபொருள் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றன. ரஷ்யாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரஷியாவின் டாலர் வர்த்தகத்தை முடக்கும் வகையில் ஸ்விப்ட் மெசேஜிங் தளத்தில் இருந்து ரஷியாவை நீக்கி விட்டன உலக நாடுகள். 

    உக்ரைன் ஏற்றுமதியில் ஈடுபட முடியாத அளவுக்கு கருங்கடலில் ரஷ்யா தன்னுடைய போர் கப்பல்களை நிறுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் நாட்டாலும் எவ்வித வர்த்தகத்திலும் ஈடுபட முடியவில்லை. இப்படி பொருளாதாரம் பலவிதத்தில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் பல நாடுகளில் பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    உலக அளவைப் பொறுத்தவரையில் ரஷ்யா தான் அதிக அளவு கோதுமையை ஏற்றுமதி செய்கிறது. ஆனால் இப்பொழுது ரஷ்யா பொருளாதார தடையால் பாதிக்கப்பட்டு வருவதால் முந்தைய அளவைப் போல ஏற்றுமதி செய்ய முடியவில்லை. சென்ற ஆண்டு மட்டும் 37 மில்லியன் கோதுமையை ஏற்றுமதி செய்திருந்தது ரஷ்யா. ஆனால் இந்தமுறை அந்த அளவில் ஏற்றுமதி செய்ய இயலாது. 

    இந்நிலையில் தான் இந்தியா தன்னுடைய கோதுமை ஏற்றுமதி அளவை அதிகரித்து உள்ளது. இதுவரை இந்தியா 7.85 மில்லியன்  டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. வழக்கமாக இந்தியா 2.1 மில்லியன் டன் கோதுமையை மட்டுமே ஏற்றுமதி செய்யும். இந்த வருடம் இந்தியா தன்னுடைய ஏற்றுமதியை ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 

    பொருளாதாரத் தடையினால் ரஷ்யாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அளவீடு கடந்த மாதம் மார்ச் 21 வரை எடுக்கப்பட்ட அளவீடு ஆகும். ஆனால், அதற்கு பின் ஏற்றுமதி இன்னும் உயர்ந்துள்ளதாகவும் அதனைப் பற்றிய தகவல்கள் இனிமேல் தான் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தியா இதுவரை வங்காளதேசம், இலங்கை, ஓமன், கத்தார், தென்கொரியா மற்றும் பல நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....