Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ரஷ்யா பிரதமர் புதின் பொதுக்கூட்டத்தில் உரை : பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஒளிபரப்பு! நடந்தது என்ன?

    ரஷ்யா பிரதமர் புதின் பொதுக்கூட்டத்தில் உரை : பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஒளிபரப்பு! நடந்தது என்ன?

    ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் பொதுக்கூட்டத்தில், உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே அரசுத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது அங்கு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து விளாடிமிர் புதின் தலைமையிலான புதின் அரசு, உக்ரைன் நாட்டின் மீது கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் போர்த்தொடுத்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமெரிக்கா,பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் இரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. உக்ரைன் மீது போர்தொடுப்பதை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டும் இரஷ்யா போரை நிறுத்தாமல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் சரணடயாமல் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. 

    இந்நிலையில், இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மாஸ்கோவில் உள்ள கால்பந்து மைதானத்தில் பொதுமக்களிடையே சிறப்பு உரையாற்றினார். இதனை இரஷ்யாவின் அரசுத் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்தது. அப்பொழுது பேச ஆரம்பித்த இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நம் ரஷ்யப் போர்வீரர் ஒருவருடன் இந்த நடவடிக்கை ஒத்துப் போகிறது என்று பேசிக்கொண்டிருக்கும்போது, அதனை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த இரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் அந்நிகழ்ச்சி ரத்து ஆனது. இதனால், பொதுமக்கள் கடும் குழப்பத்திற்கு உள்ளானர்.

    இது குறித்து விளக்கமளித்த தேசிய இரஷ்ய தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம், நேரடி ஒளிபரப்பின் போது ஒளிபரப்பு கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் இந்த தடங்கல் ஏற்பட்டதாகக் கூறியுள்ளது. சுமார் 10 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தொடக்கத்தில் இருந்தே இரஷ்ய அதிபரின் உரை ஒளிபரப்பப்பட்டது. 

    இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய விளாடிமிர் புதின், நம்முடைய நாடு நீண்ட காலமாக ஒற்றுமையில்லாமல் இருந்து வருகிறது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகள் இரஷ்யாவை உக்ரைனுடன் இணைந்து அச்சுறுத்தப் பார்க்கிறது. அதனால், உக்ரைன் மீது இந்த நடவடிக்கை மிக முக்கியம் என தெரிவித்துள்ளார். மேலும், தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட பெரிய அன்பு வேறு எதுவும் இல்லை என்ற திருவிவிலிய வசனத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....