Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நாங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம் - உக்ரைன்; இரஷ்யாவின் சதி!

    நாங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம் – உக்ரைன்; இரஷ்யாவின் சதி!

    உக்ரைனில் நடைபெற்று வரும் போர் இன்றுடன் மூன்றாவது நாளை எட்டியிருக்கிறது. இருப்பினும் போர் ஒய்வதற்கான அறிகுறிகள் ஏதும் இதுவரை தென்படவில்லை. இரஷ்யாவும் போரை நிறுத்துவதாய் இல்லை, உக்ரைனும் அடிப்பணிவதாய் இல்லை. உக்ரைனுக்கு உதவி தேவைப்படும் நிலையில்,சுவீடன் தவிர்த்து எந்த அண்டைய நாடும் இதுவரை உக்ரைனுக்கு நேரடி உதவிகளை செய்யவில்லை. 

    உக்ரைனுக்கு  உதவி செய்யும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா, உக்ரைன்  நேட்டோ நாடு இல்லை என்பதால் போரில் தலையிட மறுத்துவிட்டது. அமெரிக்கா இப்படி கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

    war

    தற்போதைய சூழல் படி, இரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-க்குள்  நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்னும் 48 மணி நேரத்திற்குள், உக்ரைனின் தலைநகரான கீவ் பகுதியை இரஷ்ய இராணுவம் கைப்பற்றிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

    மறுபுறம், உக்ரைன் இராணுவ வீரர்களை, அதிபர் ஜெலன்ஸ்கி சரணடைய சொல்வதாக தகவல்கள் பரவி கொண்டிருந்தன. ஆனால் பரவும் தகவல் பொய் என்று அதிபர் கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலேன்ஸ்கி நான் இராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக வதந்திகள் பரவி வருவதாகவும், நாங்கள் சரணடைவதாய் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “நாங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம். எங்களின் சுதந்திரத்திற்காக நாங்கள் போராடுகிறோம். இது எங்கள் நாடு. நாங்கள் எங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக போராடுகிறோம்” என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

    இரஷ்ய அதிபர் புடின்

    இந்நிலையில் இரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் இராணுவ வீரர்களிடத்து, நியோ நாசி ஒருவர்தான் உங்கள் நாட்டை ஆள்கிறார் என்றும் அவரை ஆதரிக்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ஆளும் அரசு உங்கள் குழந்தைகளை நாசம் செய்து விடுவார்கள் என்றும் உங்கள் வீட்டு பெண்கள், முதியவர்களை அவர்களால் காப்பாற்ற முடியாது என்றும் ஆதலால் ராணுவமே அங்கு ஆட்சியை கைப்பற்றி, அரசை கவிழ்க்க வேண்டும் என்று இரஷ்ய அதிபர் கூறியள்ளார். இரஷ்ய அதிபரின் இந்த அனுகுமுறை சதித்திட்டம் பொறுந்தியது எனவும் கூற்றுகள் எழும்புகின்றன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....