Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்த இரஷ்யா; ஐ.நா.வை அவமதிக்கிறதா?

    ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்த இரஷ்யா; ஐ.நா.வை அவமதிக்கிறதா?

    ‌உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஓர் பேரதிர்ச்சி சம்பவம் தான் இரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்துள்ள போர். இப்போருக்கு பலரும் பல்வேறு காரணங்களை கூறி வரும் நிலையில், நேட்டோ தான் முக்கிய காரணமாக பேசப்படுகிறது.

    நேட்டோவில் உக்ரைனை சேர்க்கக் கூடாது என்பதற்காகத் தான், இரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, போர்த் தொடுக்க ஆரம்பித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் நடக்கும் மிகப் பெரிய போராக, இப்போர் பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து, இரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், உக்ரைனுக்கு உலகநாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் ஏராளமான மக்கள் உயிரழந்ததோடு, சிலர் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர்.

    இரண்டு மாதங்களைக் கடந்தும், போர் நடைபெற்று வருவதால், அதிகளவு பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரஷ்யாவின் இந்தக் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும், கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. போரை நிறுத்துவதற்காக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், எந்தவித பலனையும் அளிக்கவில்லை‌.

    இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன் இரஷ்யா சென்றார் ஐ.நா சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ். அங்கு, இரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதன்பின், ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், உக்ரைன் தலைநகர் கீவ் சென்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். அந்நேரத்தில், அந்நகர் மீது இரஷ்யப் படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தின. இதனைக் கண்டதும் பெரும் அதிர்ச்சி அடைந்தார் ஆன்டனியோ குட்டரெஸ். உக்ரைன் தலைநகர் கீவில், அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இணைந்து, அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த, தவறி விட்டதற்காக வருத்தம் தெரிவித்தார்.

    அதற்கு அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே, அங்கிருந்து 3.5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கட்டிடங்கள் மீது, இரஷ்யப் படைகள் இராக்கெட் ஏவுகணைகளை வீசியெறிந்து, தாக்குதலை நடத்தியது.

    கடந்த இரு வாரங்களாக கீவ் நகர் மீது, தாக்குதல் எதையும் நடத்தாமல் இருந்தது இரஷ்யப் படைகள். ஆனால், ஐ.நா.சபை பொதுச்செயலாளர் கீழ் நகர் வந்துள்ள சமயத்தில், இரஷ்யப் படைகள் தாக்குதல் நிகழ்த்தி இருப்பது, ஐ.நா அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ஐ.நா சபையை அவமதிக்கும் நோக்கில், இரஷ்யா இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க; பந்துவீச்சால் பஞ்சாப்பை திணறடித்த லக்னோ, புள்ளிப்பட்டியிலில் ஏற்பட்ட மாற்றம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....