Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட இரஷ்யா !

    சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட இரஷ்யா !

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உக்ரைனுக்கு மட்டுமல்ல, ரஷ்யாவுக்கும் பலத்த அடியை தந்துள்ளது என்பதுதான் உண்மை. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நிலைக்குறித்து உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றன. யார் பேச்சையும் கேட்க மாட்டேன் என்பது போல் ரஷ்யா தொடர்ந்து போரிட்ட நிலையில் உள்ளது. மேலும், தற்சமயத்தில் உக்ரைனின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது, ரஷ்யா.

    russia attack

    ரஷ்யாவின் இந்த செயல்பாடுகள் ரஷ்யாவுக்கும் சறுக்கல்களை தந்த வண்ணம் உள்ளன. ரஷ்யா சந்தித்துக்கொண்டிருக்கும் சறுக்கலானது பொருளாதாரம் சார்ந்து உள்ளது. ஆம்! ரஷ்யா தற்போது பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளது. ரஷ்யாவில் இயங்கிவந்த பல அந்நிய நாட்டு நிறுவனங்களும் தங்களின் சேவையை தற்காலிகமாக ரஷ்யாவில் மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. 

    russian

    பொழுதுபோக்கு சார்ந்த நிறுவனங்கள் கூட தங்களின் சேவையை ரஷ்யாவில் நிறுத்தி வருகின்றன. அதிக பயனர்களை கொண்ட நெட்ஃப்ளிக்ஸ் அதிகாரப்பூர்வமாய் தனது சேவையை ரஷ்யாவில் முடக்கி வைத்துள்ளது. உலகின் பல பகுதிகளிலும் வெளியான பேட்மென் திரைப்படமும் ரஷ்யாவில் வெளியிடப்படாது என்று அறிவிக்கப்பட்டு அதன்படியே பேட்மென் ரஷ்யாவில் வெளியிடப்படாமல் தள்ளிப்போனது. 

    netflix

    தற்போது நெட்ஃப்ளிக்ஸ் பின்பற்றிய வழியை அமேசான் நிறுவனமும் பின்பற்றுகிறது. ஆம்! அமேசான் டெலிவரி சேவைகள், அமேசான் பிரைம் ஓடிடி தள சேவைகள் போன்றவற்றை ரஷ்யா மற்றும் ரஷ்யாவின் உதவி நாடான பெலாரஸிலும் நிறுத்துவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், AWS கிளவுட் கம்பியூட்டிங் சேவைக்கு இரு நாடுகளில் இருந்தும் புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அமேசான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    இப்படியாக அடிப்படை சேவைகள் முதல் பொழுதுபோக்கு சேவைகள் வரை பலவை முடக்கப்பட்டுள்ளதால் ரஷ்ய மக்கள் பெரிய இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதை கவனித்த உலக மக்கள் ரஷ்ய அதிபரின் உக்ரைன் படையெடுப்பை ‘சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதாக’ விமர்சித்து வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....