Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் விஜய் வாக்களிக்க வந்த காருக்கு இன்சூரன்ஸ் செய்யப்படவில்லையா? என்ன சொல்கிறது விஜய் தரப்பு!

    நடிகர் விஜய் வாக்களிக்க வந்த காருக்கு இன்சூரன்ஸ் செய்யப்படவில்லையா? என்ன சொல்கிறது விஜய் தரப்பு!

    தனக்கென பெரிய இரசிக பட்டாளத்தை தனது அயராத முயற்சியால் வைத்துள்ள மிக முக்கியமான நடிகர்தான், தளபதி விஐய். ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது நடிகர் விஐய் அவர்கள் வாக்களிக்க வருவது இணையத்தை கலக்குவதும், தலைப்பு செய்திகளாக உருவெடுப்பதும், விஐய் அவரின் வருகையை வைத்து பல கருத்துகள் விவாதங்கள் எழுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. 

    அந்த வகையில், நேற்றைய முன்தினம் தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனையொட்டி, தளபதி விஜய் அவர்கள் வாக்களிக்க வருவார் என அறிந்து, தளபதி விஜய் வாக்களிக்கும்  நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் கூட்டம் திரள முயற்சித்தது இருப்பினும் காவல்துறையினர் கூட்டத்தை சேர விடாமல் பார்த்துக்கொண்டனர்.

    அவரகளும் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சிவப்பு நிற மாருதி க்ளாரியோவில் வந்து வாக்கு செலுத்தி விட்டு சென்றார். விஜய் அவர்கள் வாக்கு செலுத்தியது மேற்சொன்னபடியே இணையத்தை கலக்குவதும், தலைப்பு செய்திகளாக உருவெடுப்பதுமாய் இருந்தது. கூடவே விஜய் மீதான ஒரு குற்றச்சாட்டும் உருவெடுத்தது.

    அக்குற்றச்சாட்டு என்னவெனில், விஜய் அவர்கள் வந்திருந்த மாருதி க்ளாரியோ காருக்கு இன்சூரன்ஸ் முடிந்துவிட்டதெனவும், இன்சூரன்ஸ் இல்லா காரிலேயே விஜய் அவர்கள் வந்ததாகவும் குற்றச்சாட்டும் விமர்சனங்களும் வேகமாய் பரவின.

    Vijay Entry In Election

    இந்நிலையில், விஜய் அவர்கள் வந்திருந்த மாருதி க்ளாரியோ காருக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருப்பது தற்போது நிறுபிக்கப்பட்டுள்ளது. இதனால், குற்றச்சாட்டும் விமர்சனங்களும் மறைந்த வண்ணம் உள்ளன.

    slip

    விஜய் அவர்கள் இறுதியாய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாத வெளியீட்டுக்கு தயாராக இருப்பதும், சமீபத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த அரபிக்குத்து பாடல் தளபதி விஐய் இரசிகர்களை மட்டும் அல்லாது இணையத்தையும் கலக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....