Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாவிக்கொடியாக மாறுகிறதா இந்திய தேசியக்கொடி ? : ஆர்.எஸ்.எஸ் தலைவரின் சர்ச்சைப் பேச்சு

    காவிக்கொடியாக மாறுகிறதா இந்திய தேசியக்கொடி ? : ஆர்.எஸ்.எஸ் தலைவரின் சர்ச்சைப் பேச்சு

    ஒருநாள் இந்தியாவின் தேசியக்கொடியான மூவர்ணக்கொடி, காவிக்கொடியாக மாறும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து உள்ளே வர  தடை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியது. அதனைத் தொடர்ந்து மாணவிகள் கல்லூரி வாசலில் போராட்டத்தில் ஈடுபட, அவர்களுக்கு ஆதரவாக பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் களத்தில் இறங்கின. அவர்களுக்கு எதிராகவும் பல இந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. மாணவிகளுக்கு எதிராக சில மாணவிகள் காவித்துண்டுகளை அணிந்து வந்து தங்கள் எதிர்பைத் தெரிவித்தனர். அப்பொழுது, நடந்த போராட்டத்தில் கல்லூரிக்குள் இருந்த கொடிக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்த மூவர்ணக்கொடியை அகற்றிவிட்டு காவிக்கொடியை பறக்க விட்டனர். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. 

    இதற்குப் பல அரசியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கர்நாடகாவின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா இந்த சம்பவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியிருந்தார். அதாவது, மாணவர்கள் அவ்வாறு செய்ததில் எவ்விதத் தவறும் இல்லை என்றும், என்றோ ஒருநாள் இந்தியாவின் கொடி காவிநிறக் கொடியாக மாறப்போகிறது என்றும், அதனால் இது பெரிய தவறு இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும், இப்பொழுது இந்தியக்கொடி மூவர்ணக்கொடியாக இருப்பதால் நாம் அதனை மதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

    இது கர்நாடகாவில் பெரும் சர்சையைக் கிளப்ப, கர்நாடக சட்டமன்றத்தின் எதிர்கட்சித்தலைவர் மற்றும் முன்னாள் கர்நாடக முதல்வருமான சித்தாராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே,சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்தவர்கள் சட்டமன்ற வளாகத்தில் இரவு பகலாக தூங்கிப் போராட்டம் நடத்தினர். 

    இப்படிப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில், கடந்த சனிக்கிழமை கர்நாடகாவில் நடந்த பேரணியில் பேசிய கர்நாடக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்,  மூவர்ணக்கொடியை அகற்றிவிட்டு காவிநிறக்கொடியை மாற்றியதில் என்ன தவறு இருக்கிறது ? யாருக்குத் தெரியும் ? விரைவில் இந்தியாவின் தேசியக்கொடி காவிக்கொடியாக மாறலாம். அதுவரை தற்பொழுது உள்ள தேசியக்கொடியை மதிக்க வேண்டும் என்றும் இதற்கு முன்பு இந்தியாவின் கொடியாக பிரிட்டிஷ் கொடியும் அதில் நிலவுடன் கூடிய பச்சை நிறக்கொடியே இருந்து பின்பு மூவர்ணக்கொடியாக மாற்றப்பட்டதால் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் விரைவில் காவிக்கொடியாக மாறும் என தெரிவித்துள்ளார். 

    ஏற்கனவே கர்நாடக அமைச்சரின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தற்பொழுது ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கருத்து மேலும் பிரச்சினையை கிளப்பியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....