Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'நன்றி மறக்காமல் இருக்க வேண்டும்' - வீடியோவை வெளியிட்ட ரிஷப் பந்த்..

    ‘நன்றி மறக்காமல் இருக்க வேண்டும்’ – வீடியோவை வெளியிட்ட ரிஷப் பந்த்..

    எல்லாவற்றுக்கும் மத்தியில் நன்றி மறக்காமல் இருக்க வேண்டும் என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். 

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர், ரிஷப் பந்த். 25 வயதாகும் ரிஷப் பந்த் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் டெல்லி சென்றுக்கொண்டிருந்த போது கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி விபத்தில் சிக்கினார். 

    ரிஷப் பந்த் பலத்த காயம் அடைந்த நிலையில், ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார். 

    இதைத்தொடர்ந்து, ரிஷப் பந்திற்கு நெற்றியில் ஏற்பட்ட வெட்டு காயங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. மேலும், ரிஷப் பந்த் வலது கால் முட்டியில் தசை நார் கிழிந்து இருக்கிறது. வலது கை மணிக்கட்டு, கணுங்கால் பாதம் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் ரிஷப் பந்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இதன் பின்பு, ரிஷப் பந்திற்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டு, அதன்படியே மேல்சிகிச்சைக்காக ரிஷப் பந்த் மும்பையில் உள்ள  கோகிலாபென் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, ரிஷப் பந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

    இந்நிலையில், ரிஷப் பந்த் புதிய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஊன்றுகோலின் உதவியுடன் நீச்சல் குளத்தில் பயிற்சி பெறும் வீடியோவை வெளியிட்டவர், சிறிய விஷயங்கள், பெரிய விஷயங்கள், இதற்கு மத்தியில் எல்லாவற்றுக்கும் நன்றி மறக்காமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். 

    ஓடிடியில் பதான் எப்போது? வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....