Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமேகதாது அணைக்கட்டுவதற்கு எதிராக சட்டசபையில் இன்று தீர்மானம்! மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின்...

    மேகதாது அணைக்கட்டுவதற்கு எதிராக சட்டசபையில் இன்று தீர்மானம்! மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் பதில் என்ன ?

    கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தமிழ்நாடு அரசும் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் எதிர்ப்பு தெரிவித்தும் வந்தது. இந்த ஆண்டு கர்நாடக நிதிநிலை அறிக்கையில் மேகதாது அணைக் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் விதான் சவுதாவில் அனைத்து கட்சிக்கூட்டம் கூடியது.

    இதில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த கார்ஜோல், சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி, சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சித்தாராமையா, மேலவை எதிர்கட்சித் தலைவர் ஹரிபிரசாத், காங்கிரஸ் சார்பில் சிவகுமார், எச்.கே.பட்டேல் மற்றும் ம.ஜ.த சார்பில் பண்டப்பா காசம்பூர் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்து, அணை கட்டுவது தொடர்பாக டெல்லி செல்ல முடிவு செய்யப்பட்டது. 

    இதனைத் தொடர்ந்து இன்று தமிழக சட்ட சபையில் மேகதாது அணைக்கட்டுவதை எதிர்த்து தீர்மானம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் தமிழக நிதிநிலை அறிக்கையும் வேளாண் அறிக்கையும் சட்டசபையில்  தாக்கல் செய்யப்பட்டது. தமிழகமும் பரப்பரப்புடன் இருந்தது. இந்நிலையில் இந்த மேகதாது அணைக் கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேறுவது மீண்டும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    முன்பு இருந்தே தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மேகதாது அணை விவகாரத்தில் ஒருமித்த கருத்தையே தெரிவித்து வந்த நிலையில், தற்போது சட்டசபையில் இந்த தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் சம்மதம் தெரிவிக்கும் என்று நம்பப்படுகிறது. 

    இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் தீர்மானத்தை முன் மொழிந்தார். இதில் எந்தவித அனுமதியும் இன்றி மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதையும் அதற்கான முடிவை எடுத்து இருப்பதையும் ஏற்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் கர்நாடக அரசின் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டார். மேலும் மத்திய அரசு மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி அளிக்க கூடாது எனவும் தீர்மானித்தில் வலியுறுத்தப்பட்டது.

    மேலும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த கார்ஜோல் இன்று தான் டெல்லி செல்லப் போவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சென்றவாரம் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தீர்மான நிறைவேற்றம் மத்திய அரசுக்கும் கர்நாடக மாநில அரசுக்கும் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    தீர்மானம் நிறைவேற்றியபின் இத்தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு இதனை ஏற்குமா அல்லது கர்நாடக அரசுக்கு ஏதேனும் அறிவுரை கூறுமா என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்புகளும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....