Monday, March 18, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஓஎன்ஜிசியில் வேலைவாய்ப்பு: 3,614 காலி பணியிடங்களுக்கு இன்றே விண்ணப்பியுங்கள்!

    ஓஎன்ஜிசியில் வேலைவாய்ப்பு: 3,614 காலி பணியிடங்களுக்கு இன்றே விண்ணப்பியுங்கள்!

    இந்தியப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் என அழைக்கப்படுவது தான் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC). இது
    இந்தியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் 81 சதவிகிதமும், கச்சா எண்ணெய் உற்பத்தியில் 77 சதவிகிதமும் பங்களிக்கிறது. இந்தியாவில் அதிக இலாபம் ஈட்டும் நிறுவனங்களில், இந்நிறுவனமும் ஒன்றாகும்.

    தற்போது, 3614 அப்ரண்டிஸ் பயிற்சிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ONGC அறிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக நிறுவனத்தில், வருடந்தோறும் அப்ரண்டிஸ் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு நடத்தப்படும்.

    அவ்வகையில், சட்டம் 1961ன் கீழ் இந்த ஆண்டுக்கான அப்ரண்டிஸ் பயிற்சிக்கு, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தமாக 3614 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி இது குறித்த அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில், விண்ணப்பப் பதிவும் அன்றைய தினத்தின் காலை 11 மணி முதலே தொடங்கிவிட்டது.

    அப்ரண்டிஸ் பயிற்சிக்கான மொத்த காலிப் பணியிடங்கள் : 3614

    வயது வரம்பு : மே 15, 2022 தேதியின் படி 18 முதல் 24 வயதுக்குள்ளாக இருத்தல் அவசியம்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : மே 15, 2022 மாலை 6:00 மணி வரைக்கும்.

    முடிவுகள் வெளியாகும் தேதி : 23 மே 2022.

    தேர்வு செய்யப்படும் முறை : தகுதித்தேர்வு மற்றும் பெறப்படும் மெரிட் முதலியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    அப்ரண்டிஸ் பயிற்சிக்கு, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களுடைய தகுதி மற்றும் சம்பளம் குறித்த மேலும் பல விவரங்களை, ஓஎன்ஜிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ongcindia.com தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும், அதே இணைய தளத்திலேயே தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.

    பந்துவீச்சால் பஞ்சாப்பை திணறடித்த லக்னோ, புள்ளிப்பட்டியிலில் ஏற்பட்ட மாற்றம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....