Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபட்லரும், தினேஷ் கார்த்திக்கும் நிகழ்த்திய சரவெடி; ஆனால், சத்தமாய் வெடித்தது என்னவோ இவருடையதுதான்!

    பட்லரும், தினேஷ் கார்த்திக்கும் நிகழ்த்திய சரவெடி; ஆனால், சத்தமாய் வெடித்தது என்னவோ இவருடையதுதான்!

    15-வது ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

    முதல் இன்னிங்ஸ் 

    அதன்படி, வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ள ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லரும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் களம் இறங்கினர். ஆனால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கு டேவிட் வில்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

    இதற்குபின் களத்திற்கு வந்தார், முன்னாள் பெங்களூர் அணியின் வீரரும், இந்நாள் ராஜஸ்தான் அணி வீரருமான தேவ்தத் படிக்கல். நிதானமாக விளையாடிய இவர் 29 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில், விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

    இதற்குபின், பலரும் ஆவலோடு எதிர்ப்பார்த்த சஞ்சு சாம்சன் களத்திற்கு வந்தார். நன்றாக விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் எட்டு ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 

    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, மறுபுறம் தனக்கே உரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார், பட்லர். அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த பட்லருடன் இணைந்தார், ஹெட்மெயர். இம்முறை ஹெட்மெயர் அதிரடிக்கு விடுப்புக் கொடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

    அதன்படி, ஹெட்மெயர் 31 பந்துகளுக்கு 42 ரன்களும், அதிரடியாய் விளையாடிய பட்லர் 47 பந்துகளுக்கு 70 ரன்களும்  எடுத்து இறுதிவரை களத்தில் இருக்க, இருபது ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணியானது 169 ரன்கள் எடுத்தது. 

    பட்லரைத் தவிர மற்றவர்கள் அதிரடி காண்பிக்க மறந்ததாலும், இரு விக்கெட்டுகள் சிறு இடைவெளியிலேயே நிகழ்ந்ததாலும், ராஜஸ்தான் அணியால் 170 ரன்களை மட்டுமே பெங்களூர் அணிக்கு இலக்காக கொடுக்க முடிந்தது. 

    170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். 

    இரண்டாம் இன்னிங்ஸ் 

    தொடக்க ஆட்டக்காரர்களாக டூ ப்ளெசிஸ் அவர்களும் அனுஜ் ராவட் அவர்களும் களமிறங்கின்ர். இருவரும் அணிக்கு நிதானமான தொடக்கத்தை தந்தனர். ஆதலால் முதல் ஆறு ஓவரில் ஒரு விக்கெட் ஏதும் இழக்காமல் அசத்தியது, பெங்களூர் அணி. 

    ஆனால், ஆறாவது ஓவரின் ஆறாவது பந்தில் டூ ப்ளெசிஸ் தனது விக்கெட்டை இழக்க, அடுத்த ஓவரிலேயே அனுஜ் ராவட் அவர்களும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் பெங்களூர் அணியானது இரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 61 ரன்களை எடுத்தது. இதற்கு அடுத்து வந்த விராட் கோலி தூரதிர்ஷ்ட வசமாக 5 ரன்களுக்கு ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதற்குபின் களத்திற்கு வந்த டேவிட் வில்லி டக் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். 

    இதனால் இக்கட்டான சூழலுக்கு பெங்களூர் அணி உள்ளாக, ஷாபாஸ் அகமது மற்றும் தினேஷ் கார்த்திக் அவர்கள் இக்கட்டான சூழலில் இருந்து பெங்களூர் அணியை மீட்டனர். 

    இருவரும் அதிரடியாக விளையாட பெங்களூர் அணி 19.1 ஓவரில் 173 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது. ஷாபாஸ் அகமது 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அனைவரையும் தன் ஆட்டத்தால் கவர்ந்த தினேஷ் கார்த்திக் 23 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆட்ட நாயகன் விருது தினேஷ் கார்த்திக் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

    ராஜஸ்தான் அணி சார்பாக பட்லரும், பெங்களூர் அணி சார்பாக ஷாபாஸ் அகமதுவும், தினேஷ் கார்த்திக்கும் சரவெடிகள் நிகழ்த்த, சத்தமாய் வெடித்தது என்னவோ தினேஷ் கார்த்திக் நிகழ்த்தியதுதான்.  தினேஷ் கார்த்திக் அவர்களின் ஆட்டம் பலரையும் கவர்ந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....