Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதனி ஆளாய் போராடிய டூ பிளெசிஸ்; கோலி தந்த ஏமாற்றம்!

    தனி ஆளாய் போராடிய டூ பிளெசிஸ்; கோலி தந்த ஏமாற்றம்!

    15 ஆவது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    லக்னோ அணியின் முடிவால், பெங்களூர் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அனுஜ் ராவத் மற்றும் கேப்டன் டூ பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர்.

    இந்த ஜோடி மின்னல் வேகத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்தும் என்று எதிர்ப்பார்த்தால், சமீரா வீசிய முதல் ஓவரில் பெங்களூர் அணிக்கு இடி விழுந்தது. ஆம்! நான்கு ரன்களில் அனுஜ் ராவத் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதன் பின்பு வெளிவந்த விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அடையச் செய்தார்.

    ஆனால் கேப்டன் டூ பிளெசிஸ் – கிளென் மேக்ஸ்வெல் இணை விக்கெட் இழப்பை பொறுட்படுத்தாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் 23 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜேசன் ஹோல்டரின் அபார கேட்ச்சின் மூலம் மேக்ஸ்வெல் தனது விக்கெட்டை இழந்தார்.

    இதற்கு பின் வந்த பெங்களூர் அணி வீரர்கள் பெரிதாக ரன்களை எடுக்காமல் வெளியேறினர். அதே சமயம், அபாரமாக மறுமுனையில் விளையாடிய டூ பிளெசிஸ் 96 ரன்கள் எடுத்தார். நான்கு ரன்கள் எடுத்தால் சதம் என்ற நிலையில், ஹோல்டர் பந்துவீச்சில் டூ பிளெசிஸ் பெவிலியன் திரும்பினார். இருபது ஓவர்களுக்கு ஆறு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது, பெங்களூர் அணி .

    இதன்மூலம் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கில் களமிறங்கியது, லக்னோ அணி.

    லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் டி காக் களமிறங்கினர். இதில் 3 ரன்கள் மட்டுமே அடித்து டி காக் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே 6 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் க்ருனால் பாண்டியா களமிறங்கினார்.  நிலைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கே.எல். ராகுல் 30 ரன்கள் எடுத்து ராகுல் தனது விக்கெட்டை இழந்தார்.

    பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா 13 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதிரடியாக ஆடிவந்த க்ருனால் பாண்டியா 42 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.

    லக்னோ அணியின் பேட்டிங்கை தொடர்ந்து மட்டுப்படுத்தியது பெங்களூர் அணியின் பந்துவீச்சு. இதனால் இருபது ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வியை சந்தித்தது.

    சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணியின் கேப்டன் டூ பிளெசிஸ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இதையும் படியுங்கள், பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் கைக்குழந்தை திடீரென உயிரிழப்பு : சோகத்தில் கால்பந்து உலகம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....