Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'தீர்ப்புகளில் இருந்தே மரக்காணம் கலவரத்திற்கு காரணம் யார் என்று தெரியும்' - இராமதாஸ் கருத்து!

    ‘தீர்ப்புகளில் இருந்தே மரக்காணம் கலவரத்திற்கு காரணம் யார் என்று தெரியும்’ – இராமதாஸ் கருத்து!

    2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மரக்காணம் கலவரத்தை தமிழகத்தில் அவ்வளவு எளிதில் எவரும் மறந்துவிட மாட்டர். கடந்த 2013 ஏப்ரல் 23ல், செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கத்தின் இளைஞர் பெருவிழா நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான வன்னியர்கள் பங்கேற்றனர்.

    அப்போது, இந்த இளைஞர் பெருவிழாவில் கலந்துக்கொள்ள அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட மரக்காணம் வழி பயணப்பட்டனர். அச்சமயத்தில் மரக்காணம் பகுதியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு இடையே மோதல் நடந்தது. 

    இந்த மோதலானது பெரும் கலவரமாக வெடித்தது. இந்த மரக்காணம் கலவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். மேலும், பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த 200 பேருக்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 20 பேரின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அன்றிலிருந்து நடைபெற்ற இந்த வழக்கிற்கு, இன்று தீர்ப்பு வந்துள்ளது.

    ஆம்! அரசு தரப்பில் போதுமான சாட்சியங்கள் அளிக்கப்படாததால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. 

    இத்தீர்ப்பானது, பாட்டாளி மக்கள் கட்சியின் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் அவர்கள், மரக்காணம் கலவரம் தொடர்பாக புனையப்பட்ட பொய் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து பாமகவினரையும் திண்டிவனம் நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

    மரக்காணம் கலவரம் என்பது பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். அதில் பா.ம.க.வின் அப்பாவி தொண்டர்கள் இருவர் கொல்லப்பட்டனர். ஆனால், திட்டமிட்டு பாமகவினர் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டன என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    இப்போது அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கலையரசன், சசிக்குமார் உள்ளிட்ட 20 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதன் மூலம் நீதி வென்றிருக்கிறது.

    இதே வன்முறையில் பா.ம.க.வினரின் படுகொலைக்கு காரணமானவர்கள் இதே நீதிமன்றத்தால் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த இரு தீர்ப்புகளில் இருந்தே மரக்காணம் கலவரத்திற்கு காரணம் யார்? என்பது தெளிவாக புரியும் என்று ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். 

    திண்டிவனம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் உண்மைகளை எடுத்து வைத்து வாதாடி, நீதியை நிலைநாட்ட உதவிய பா.ம.க. வழக்கறிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை ராமதாஸ் தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள், அமைச்சர் தெரிவித்த காரணத்தை ஏற்க முடியவில்லை – ராமதாஸ் காட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....