Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தற்கொலை, கொலை என உருவெடுத்துள்ள இப்பிரச்சினையை தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் - இராமதாஸ்...

    தற்கொலை, கொலை என உருவெடுத்துள்ள இப்பிரச்சினையை தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்!

    ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதங்கள் பல நடைபெற்று வருகின்றன. பல அசம்பாவிதங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் அவரது வீட்டின் பின்புறம் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்செய்தியானது தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் ராமாதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 

    அப்பதிவில், முதலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், பின்னர் ஆன்லைனில் சூதாட மற்றவர்களை கொலை செய்தனர், இப்போது ஆன்லைனில் சூதாடியவர்கள் கொல்லப்படுகின்றனர். இப்படி பலவகையான குற்றங்களின் பிறப்பிடமாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

    ஆன்லைன் சூதாட்டத்தால் மக்களும், குடும்பங்களும் சீரழிவதை நாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்ற கேள்வியை எழுப்பிய ராமதாஸ், இது உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், வெகு விரைவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக பெரிய அளவில் உருவெடுக்கும் என்றும் அப்பதிவில் அவர் தெரியப்படுத்தியுள்ளார். 

    ராமதாஸ் அவர்கள், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால், இதுவரை எந்த விசாரணையும் இல்லை. அதனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

    சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் அவர்கள், ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதன் மூலம் தான் தற்கொலைகளையும், இளைய தலைமுறையினரின் சீரழிவையும் தடுக்க முடியும் என்றும் அதற்காக உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு என்றும் கூறியிருந்தது, குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....