Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'ஜெயிலர் ரெடி' மீண்டும் ரசிகர்களை சந்திக்க ரஜினிகாந்த் முனைப்பு

    ‘ஜெயிலர் ரெடி’ மீண்டும் ரசிகர்களை சந்திக்க ரஜினிகாந்த் முனைப்பு

    ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் கருத்து, அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளாய் மாறியுள்ளது.

    சென்னை வியாசர்பாடியில் நடிகர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளையை ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் தொடங்கி வைத்தார். 

    அப்போது, ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அவரது சகோதரர் சத்ய நாராயணராவ் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

    மேலும், அறக்கட்டளை தொடக்க விழாவில்  ரஜினிகாந்தின் சகோதரர் தெரிவித்துள்ளதாவது:

    இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது, அவர் ரஜினிகாந்த் பெயரில் பல தர்மங்களை செய்து வருகிறார். இந்த அமைப்பு நன்றாக வளர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இந்த புனிதமான அறக்கட்டளை இன்றைக்கு நல்ல எண்ணத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்ய திறக்கப்பட்டு உள்ளது.

    ரஜினி ஆசீர்வாதத்தில் இவை நடைபெற்று உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை முடித்து விட்டு ரசிகர்களை சந்திப்பார், ரசிகர்கள் சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமைய வாய்ப்பு உள்ளது. 

    ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இறைவனிடம் தான் உள்ளது. ரஜினிகாந்த் ஆளுநரை அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் தான் சந்தித்தார். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று பலராலும் எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கும் அப்போது அவர் பதிலளித்தார்.

    சமீபத்தில் ரஜினிகாந்த், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது, அவர் ஆளுநர் பதவியை நோக்கி அடியெடுத்து வைத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன .இதுமட்டுமின்றி ஆளுநருடனான சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‘அரசியல் பற்றி நாங்கள் பேசினோம் ஆனால் அதைப் பற்றி இப்போது உங்களிடம் பகிர்ந்துக்க முடியாது’ என ரஜினிகாந்த் பதிலளித்தது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....