Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசீரான நிலையில் இல்லாத கொல்கத்தா; பட்லரையே சார்ந்திருக்கும் இராஜஸ்தான் - ஐபிஎல் பார்வை!

    சீரான நிலையில் இல்லாத கொல்கத்தா; பட்லரையே சார்ந்திருக்கும் இராஜஸ்தான் – ஐபிஎல் பார்வை!

    ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன. தொடர்ந்து வீழ்ச்சிகளை சந்தித்துக்கொண்டிருக்கும் கொல்கத்தா அணி தற்போது நிமிர்வது அத்தியாவசியமாகிறது. இத்தொடர் முழுவதும் ஒரு சீரான நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இயங்கவில்லை என்பதுதான் உண்மை. 

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் வீரர்கள் பெரிதும் சோபிக்காமல் இருப்பது, கொல்கத்தா அணிக்கு பெரிய பின்னடைவாகும். ஆம்! வெங்கடேஷ் ஐயர் தனது பேட்டிங்கில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அவர் இத்தொடரில் 5 போட்டிகளில் விளையாடி வெறுமனே 103 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.

    அதேப்போல், மிடில் ஆர்டரிலும் கொல்கத்தா அணி சொதப்பி வருகிறது. பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி களமிறங்க வேண்டும் இல்லையெனில் தொடர் தோல்வியில் சிக்கிக்கொள்ளும் என்பது உண்மை. 

    மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை, எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார், பட்லர். அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகமாய் பட்லரையே சார்ந்திருப்பது பல இன்னல்களுக்கு வழிவகுக்கும் என்று கணிக்கப்படுகிறது. சஞ்சு சாம்சனும் திறம்பட செயல்படுவது அவசியமாகிறது.

    மிடில் ஆர்டரில் ராஜஸ்தான் நிலையான ஆட்டத்தை மேற்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்க வேண்டிய விடயம். இறுதியில் ஹெட்மெயர் விளையாடும் விதம் ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கைத் தரும் விதமாகவே இருந்து வருகிறது என்பது நிதர்சனம்.

    இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதியதில், கொல்கத்தா அணி 13 முறையும், ராஜஸ்தான் அணி 11 முறையும் வெற்றியை ருசித்துள்ளது. 

    ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொள்ளும் இன்றைய போட்டியானது, மும்பையில் உள்ள பிரபார்ன் மைதானத்தில் இரவு 7:30 மணியளவில் தொடங்கும்! 

    இதையும் படிங்க; ஆட்டத்தை திருப்பிய ‘நோ பால்’; ஏமாற்றத்தில் சென்னை அணி ! – புலம்பலில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....