Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஹிட்லராய் வெளுத்து வாங்கிய பட்லர், யுஸ்வேந்திர சாஹலுக்கு ஹாட்ரிக் : புயல் போல சீறிய ராஜஸ்தான்...

    ஹிட்லராய் வெளுத்து வாங்கிய பட்லர், யுஸ்வேந்திர சாஹலுக்கு ஹாட்ரிக் : புயல் போல சீறிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லரின் சதம் மற்றும் யுஸ்வேந்திர சாஹலின் ஹாட்ரிக் விக்கெட் உதவியுடன் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    ஐபிஎல் தொடரின் 30வது ஆட்டம் நேற்று ப்ரபோர்ன் மைதானத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ராஜஸ்தான் அணியில் கருண் நாயர் மற்றும் ஒபேட் மெக்காய் ஆகியோர் புதிதாக களமிறங்கினர். கொல்கத்தா அணிக்கு மாற்றமாக சிவம் மாவி களமிறங்கினார். 

    முதல் இன்னிங்ஸ்

    டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் மற்றும் தேவ்தத் படிக்கல் இணை சிறப்பான தொடக்கம் தந்தது. ஒருபுறம் ஜோஸ் பட்லர் அடி வெளுத்து வாங்க மறுபுறம் பொறுமையான தொடக்கம் தந்த தேவ்தத் படிக்கல் 24 ரன்களில் வெளியேறினார். 

    வெளுத்து வாங்கிய பேட்டிங்

    அடுத்து வந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக தொடங்கி 19 பந்துகளில் 38 ரன்கள் குவித்து வெளியேறினார். இந்த தொடரில் இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்த ஜோஸ் பட்லர் 61 பந்துகளில் 103 ரன்கள் குவித்து பேட் கம்மின்ஸின் பவுன்சருக்கு வெளியேறினார். அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உதவியுடன் இந்த ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த ரியான் பராக் மற்றும் கருண் நாயர் முறையே 5 மற்றும் 3 ரன்களுக்கு வெளியேற ரன்ரேட் குறையத் தொடங்கியது. 

    ஆனால், இறுதி ஓவர்களில் சிம்ரான் ஹெட்மேயர் அதிரடியாக ஆடி ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை குவிக்க வைத்தார். சிம்ரான் ஹெட்மேயர் 13 பந்துகளில் 26 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 பந்துகளில் 2 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ், சிவம் மாவி மற்றும் ஆந்த்ரே ரஸ்ஸெல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இரண்டாவது இன்னிங்ஸ்

    218 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரோன் பின்ச் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் தந்தது. இமாலய இலக்கை துரத்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக முதல் பந்திலேயே சுனில் நரைன் ரன் அவுட்டாகி வெளியேறினார். ட்ரெண்ட் பவுல்ட் வீசிய இந்த முதல் ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஆரோன் பின்ச் மெதுவாக தட்டி விட்டு முதல் ரன்னுக்கு ஓட, பந்தை அருமையாக பிடித்த சிம்ரான் ஹெட்மேயர் ரன் அவுட் செய்து அசத்தினார். 

    அதன் பின்பு ஷ்ரேயாஸ் ஐயர், ஆரோன் பிஞ்சுடன் இணைந்து ராஜஸ்தான் அணியின் பவுலிங்கை வெளுத்து வாங்க தொடங்கினார். இருவரும் அதிரடியாக ஆட அணியின் ரன்ரேட் கிடுகிடுவென எகிறத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் வலுவான ஸ்கோருடன் கொல்கத்தா முன்னேறிக் கொண்டிருந்தது. ஆரோன் பின்ச் பிரசித் கிருஷ்ணா பந்தில் 58 வெளியேற அடுத்து வந்த நிதிஷ் ராணாவும் 18 ரன்களில் வெளியேறினார்.

    மாயாஜால சுழற்பந்துவீச்சு

    ஒருபுறம் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மறுபுறம் ரஸ்ஸெல் என வலுவான நிலையில் கொல்கத்தா இருந்தது. அப்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் மாயாஜால பந்தை வீசி ரஸ்ஸெல் சந்தித்த முதல் பந்திலேயே அவரை போல்டாக்கி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 

    கொல்கத்தா அணிக்கு மீண்டும் எமனாக வந்தது யுஸ்வேந்திர சஹால் வீசிய 17வது ஓவர். அந்த ஓவரில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட் உட்பட மூன்று விக்கெட்டுகளை தொடர்ச்சியாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார் யுஸ்வேந்திர சஹால். அடுத்து வந்த உமேஷ் யாதவ் அதிரடியாக ஆடி சிறு நம்பிக்கை கொடுக்க, அதை தவிடு பொடியாக்கினார் ஒபேட் மெக்காய்.

    இறுதி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது கொல்கத்தா அணி. பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ராஜஸ்தான் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....