Monday, March 18, 2024
மேலும்
    Homeவானிலைவெயிலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கம் நேரத்தில் சில்லென்று வந்துள்ள மழை அறிவிப்பு!

    வெயிலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கம் நேரத்தில் சில்லென்று வந்துள்ள மழை அறிவிப்பு!

    நிகழ்ந்துக்கொண்டிருக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதியில் இருக்கின்றனர். மே மாதமே இன்னும் தொடங்காத நிலையில், தற்போது நிலவும் வெயிலைக் கண்டு அஞ்ச வேண்டிய நிலைதான் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் பலரும் மனதிலும் இந்த வெயிலின் தாக்கம் குறையாதா? என்ற தவிப்பும், மழைப்பொழியாதா என்ற ஏக்கமும் பரவலாக காணப்பட்டு வருகிறது. 

    ஏக்கத்தைப் போக்கும் அறிவிப்பு 

    இப்படியான ஏக்கத்தைப் போக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் தற்போது நிகழும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மழைப்பொழியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை வானிலை ஆய்வு மண்டலத்தின் அறிக்கையின்படி  வெப்பசலனம் காரணமாக, இன்று வட உள்தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    நாளை முதல் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில்  லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதேப்போல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மண்டலத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிலவும் வெப்பநிலை 

    வெப்பசலனம் காரணமாகவே இந்த மழை என்பதால் அனைத்து இடங்களிலும் மழையை எதிர்ப்பாரக்க முடியாது என்பது தெளிவாகிறது.

    மேலும், தமிழகத்தில் நிலவும் வெப்பநிலைக் குறித்தும் அறிவிப்பை வெளியிட்டது, சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, இன்று முதல் ஒன்றாம் தேதி வரை  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட ஒரு டிகிரி செல்சியஸ் முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

    சென்னை நிலவரம் 
    • சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 
    • வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். 

    வானிலை அறிவிப்பின்படி, மழைப் பெய்தால் தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்று விடுபடலாம் என்றே மக்களின் எண்ணம் இருக்கிறது. 

    இதையும் படிங்க; வானிலை அறிக்கையில் இதையெல்லாம் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? வியப்பூட்டும் தகவல்கள் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....