உக்ரைனில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் அங்குள்ள அந்நிய நாட்டு மக்கள் தங்களின் நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து தங்களின் நாடுகளுக்கு செய்திகள் அனுப்பி வருகின்றனர். ஏனைய நாடுகளும் உக்ரைனில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமகன்களை உக்ரைனில் இருந்து வெளியேற்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. ஆலோசனையின் முடிவில் வழி கண்டடைந்தவுடன் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்போம் என்று கூறப்பட்டது. அதன் படியே பல மாற்று வழிகளும் யோசிக்கப்பட போர் காரணமாக பலவை பனலனளிக்காமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இப்படியான சூழலில்தான், உக்ரைனில் வாழும் இந்தியர்கள் தங்களின் நிலையை காணொளியாக பதிவு செய்து இந்திய அரசுக்கு அனுப்பி வருகின்றனர். அக்காணொளியில் போர் பதற்றம் நீடிப்பதால் இங்குள்ள கடைகளில் பொருட்கள் இல்லை எனவும், போதுமான உணவு கிட்டப்படவில்லை என்றும், ஏடிஎம்களில் பணம் இருப்பதில்லை என்றும் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில்தான் இன்று இந்தியா ஒரு மாற்றுவழி கண்டடைந்துள்ளது. அதன் மூலம் ருமேனியா வரை விமானங்களை அனுப்பி அதன் மூலம் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரி, போலாந்து வழிகளின் வழியை இந்தியர்கள் உபயோகித்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரஷ்யா அதிபர் புதின் உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கும், மாணவர்களின் பாதுகாப்புக்கும் உறுதி அளித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி அவர்கள் புதின் அவர்களுடன் பேசிய பிறகு இக்கூற்றை புதின் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உக்ரைன் மாணவர்களின் பயண செலவை தமிழகமே ஏற்கும் என்றும், 5000 மாணவர்களை மீட்டு அழைத்து வர அலுவலர்களை நியமித்து உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.