Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல்லில் திருப்பம் : குஜராத் அணியின் வெற்றியை தடுத்து நிறுத்திய பஞ்சாப்! 

    ஐபிஎல்லில் திருப்பம் : குஜராத் அணியின் வெற்றியை தடுத்து நிறுத்திய பஞ்சாப்! 

    ஐபிஎல் 2022 தொடரின் 48வது ஆட்டத்தில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எளிதாக தோற்கடித்தது. 

    டாஸை வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அந்த அணிக்கு சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா இணை தொடக்கம் தந்தது. வழக்கம் போல சுப்மன் கில் சொற்ப ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சாய் சுதர்சன் நிலைத்து நின்று ஆடினார். விருத்திமான் சஹாவின் விக்கெட்டு பிறகு வந்த ஹர்திக்பாண்டியா 1 ரன்னில் வெளியேறினார். அதற்கு அடுத்து வந்த டேவிட் மில்லர் மற்றும் ராகுல் திவாட்டியா அடுத்தது வெளியேற, குஜாரத் அணியின் இறுதிநேர ரன் குவிப்பாளரான ரஷித் கானும் டக் அவுட் ஆகி வெளியேறினார். 

    ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடிய சாய் சுதர்சன் 50 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது. அற்புதமாக பந்து வீசி காஜிசோ ரபாடா 4 விக்கெட்டுகளை அள்ளினார். அர்ஷ்தீப் சிங், ரிஷி தவான் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

    144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணிக்கு ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஷிகர் தவான் இணை தொடக்கம் கொடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ஜானி பேர்ஸ்டோ இந்த முறையும் 1 ரன்னில் மண்ணைக் கவ்வினார்.

    அடுத்து வந்த பனுகா ராஜபக்சா, ஷிகர் தவனுடன் இணைந்து சிறப்பாக விளையாட ஆரம்பித்தார். இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுக்க ஆரம்பித்தனர். எவ்வளோ முயற்சி செய்தும் குஜராத் அணியால் பஞ்சாப் அணியின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருவழியாக லாக்கி பெர்குசன் பந்துவீச்சில் பனுகா ராஜபக்சா 40 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். 

    அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் முகமது ஷமி ஆடிய 16வது ஓவரில் மட்டும் 3 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரி உட்பட 28 ரன்களை குவித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். லியாம் லிவிங்ஸ்டன் 30 ரன்களுடனும், ஷிகர் தவான் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் தரப்பில் முகமது ஷமி மற்றும் லாக்கி பெர்குசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சிறப்பாக பந்து வீசி குஜராத் அணியை நிலைகுலைய வைத்த காஜிசோ ரபாடா ஆட்டநாயகன் விருது பெற்றார்.  

    இதையும் படிங்க; உங்கள் கல்லீரலை பாதுகாக்க வேணுமா? – அப்போ இவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....