Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் 2022 : குஜராத்தின் வெற்றிப் பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுமா பஞ்சாப் ?

    ஐபிஎல் 2022 : குஜராத்தின் வெற்றிப் பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுமா பஞ்சாப் ?

    ஐபிஎல் 2022 தொடரில் இன்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொள்கின்றன. இந்த ஆட்டமானது இன்று இரவு 7.30 மணிக்கு டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 

    இந்த ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சிறப்பாக அமைத்துள்ளது. அந்த அணியில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ரஷித் கான் பந்துவீச்சில் மட்டுமல்லாமல் மட்டைவீச்சிலும் ஜொலித்து வருவது கூடுதல் பலம். ராகுல் திவாட்டியா இறுதி ஓவர்களில் வெளுத்து வாங்கி வருகிறார். சுப்மன் கில் இன்று சிறப்பாக விளையாடினால் குஜராத் அணி இன்னும் சிறப்பாக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    கடந்த ஆட்டத்தில் உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சில் காயமடைந்த குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம் தான். மற்றபடி பந்துவீச்சில் முகமது ஷமி பக்கபலமாக இருந்து வருகிறார். 

    பஞ்சாப் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் வலுவான அணியாகவே காணப்படுகிறது. ஷிகர் தவான், மயங்க் அகர்வால், பனுகா ராஜபக்சா மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்து வருகிறது. பவுலிங்கில் தான் பஞ்சாப் அணி திணறி கஷ்டப்பட்டு வருகின்றனர். அதனை சரிசெய்யும் பட்சத்தில் பிழைக்க வாய்ப்புண்டு. அது மட்டுமில்லாமல் இந்த ஆட்டம் அவர்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் ஆகும். இதில் தோற்கும் பட்சத்தில் அவர்களின் பிளே-ஆப் கனவு கேள்விக்குறி தான். 

    இந்த தொடரில் இதற்கு முன்பு நடந்த ஆட்டத்தில், 6 விக்கெட் வித்தியாசத்தில்  குஜராத் வெற்றி பெற்றிருந்து. அந்த வெற்றிப் பயணத்திற்கு பஞ்சாப் அணி முட்டுக்கட்டை போடுவார்களா ? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    உங்க உடல் எடையை குறைக்கணுமா? அப்ப இந்த 5 டிப்ஸ மறக்காம பின்பற்றுங்க!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....