Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவெற்றி கணக்கை எந்த அணி தொடரப்போகிறது? கே.எல்.ராகுல் அசத்துவாரா?

    வெற்றி கணக்கை எந்த அணி தொடரப்போகிறது? கே.எல்.ராகுல் அசத்துவாரா?

    இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் இதற்கு முன்பு பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளது நம்மில் பலருக்கும் தெரியும். 

    மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வாலும், கே.எல்.ராகுலும் பஞ்சாப் அணியில் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோது மிகச்சிறந்த பார்டனர்ஷிப்களை அமைத்திருந்தனர். இப்போது இருவரும் எதிரெதிர் அணிகளில் விளையாட உள்ளது பலரிடத்திலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

    பஞ்சாப் அணியானது கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்த வீரியத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. அதேப்போல், லக்னோ அணியானது மும்பை அணியை கடந்த போட்டியில் தோற்கடித்தது. மேலும், மும்பைக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் அடித்த சதமானது, லக்னோ அணிக்கு பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

    இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியானது நான்கு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியிலில் ஆறாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஐந்து வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திலும் உள்ளது. மேலும், தகுதிச்சுற்றுக்கு முன்னேற இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றிப்பெற முனைப்பைக் காட்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

    பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளார். இந்த துரதிர்ஷ்டவசம் பலராலும் கவனிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மேலும், இந்த தொடரில் இதுவரை கேப்டனாக கே.எல்.ராகுல்தான் அதிக ரன்கள் அடித்துள்ளார். இதுவரையில், 368 ரன்களை கே.எல்.ராகுல் எடுத்துள்ளார். 

    இரு அணிகளும் மோதும் இப்போட்டியானது இன்று இரவு 7:30 மணியளவில் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

    இதையும் படிங்க; சென்னையில் போக்குவரத்து மாற்றம்; போக்குவரத்து துறையின் புதிய வியூகம் கைகொடுக்குமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....