Sunday, March 17, 2024
மேலும்
    Homeஅறிவியல்9 செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்!

    9 செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்!

    பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் நாளை 9 செயற்கைகோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 

    நாட்டின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்தது. இது நாட்டின் மிக முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டை நாளை விண்ணில் செலுத்த உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ராக்கெட்டில் ஓசன்சாட்03 என்ற புவி செயற்கைகோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்கள் வைத்து அனுப்பப்படுகிறது. 

    இந்த ராக்கெட் நாளை காலை 11.56 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுண்ட் டன் என்று சொல்லப்படுகிற இறங்குவரிசை ஏற்பாடுகள் இன்று தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மொத்தம் நான்கு நிலைகளைக் கொண்டது ஆகும். ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறனைக் கொண்டது ஆகும். மேலும் முதல் மூன்றாவது உந்து நிலைகளில் திட எரிபொருளும், இரண்டாவது மற்றும் நான்காவது நிலைகளில் திரவ உந்து சக்தியும் பயன்படுத்தப்படுகிறது. 

    வட கொரியாவை அச்சுறுத்தும் நாடுகளுக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி: அதிபர் கிம் ஜாங் எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....