Friday, March 24, 2023
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் : நடிகர் பாக்யராஜ் பரபரப்பு பேச்சு

    மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் : நடிகர் பாக்யராஜ் பரபரப்பு பேச்சு

    பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

    சென்னையில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் ‘பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022’ என்ற புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புத்தகத்தை தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வெளியிட அதனை நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் பெற்றுக் கொண்டார். 

    புத்தகதைப் பெற்றுக்கொண்ட பாக்யராஜ், தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தது மிகச்சரியான ஒன்று. மிகத்தகுதியான ஒருவரைத்தான் தலைவர் ஆக்கியுள்ளனர். வெளிநாடு சென்றாலும் அவர் மிகவும் துடிப்போடு செயல்படுகிறார். இந்த வயதில் எத்தனை பேரால் இப்படி துடிப்போடு செயல்பட முடியும். எனவே, இந்தியாவுக்கு இப்படிபட்ட ஒரு துடிப்பான தலைவர் தான் தேவை என்று அவர் பேசியுள்ளார். 

    மேலும், பிரதமர் மோடியை பற்றி விமர்சிப்பவர்கள் 3 மாதத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். இவர்கள் நல்லவற்றை பேசவும் மாட்டார்கள், நல்லவற்றை சொன்னால் கேட்கமாட்டார்கள். குறைமாசத்தில் பிறந்தவர்களுக்குத் தான் காது, வாய் சரியாக இருக்காது. எனவே அவர்கள் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். 

    சமீபத்தில் தான், இசைஞானி இளையாராஜா அம்பேத்கரும் பிரதமர் மோடியும் ஒன்று என்று பேசியது சர்ச்சையாகி இருந்தது. இந்நிலையில் தான் பாக்யராஜும் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் சிலர் அரசியல் பிழைப்புக்காக சிலர் இவ்வாறு நடந்து கொள்வதாக கூறி இருந்தார். 

    தொடர்ந்து பேசிய அவர், திமுகவினர் தொடர்ந்து திரைத்துறையினரை நசுக்கி வருவதாகவும், பாக்யராஜின் இந்த கருத்து பாஜகவுக்கு ஆதரவான கருத்து என்பதை விட பிரதமருக்கு ஆதரவான கருத்து என்று தான் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், காங்கிரசை ஒட்டுமொத்தமாக திமுகவிடம் அடகு வைத்து விட்டார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bombay jayashri

    பிரபல பாடகிக்கு மூளையில் ரத்தக் கசிவா? – வெளிவந்த தகவல்களால் அதிர்ச்சி..

    பிரபல பாடகி பாம்பே ஜெயஶ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் கோமா நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய பாடகியாக திகழ்ந்து வருபவர் பாம்பே ஜெயஶ்ரீ. கர்நாடக இசைக்கலைஞரான இவர் தென்னிந்திய...