Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பிரஷாந்த் கிஷோர் மற்றும் விஜய் சந்திப்பு : அரசியலுக்கு வர உள்ளாரா விஜய் ?

    பிரஷாந்த் கிஷோர் மற்றும் விஜய் சந்திப்பு : அரசியலுக்கு வர உள்ளாரா விஜய் ?

    தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய்யும், தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர் என்ற தகவலால் பரபரப்பாகியுள்ளது தமிழ்நாடு அரசியல் களம். 

    தமிழகத்தின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய், இவருடைய படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகிப் பெரும் வெற்றி அடைந்து வருகின்றன. இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் ஆந்திராவிலும் கணிசமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இவருடைய ரசிகர்களால் ஆரம்பிக்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கம் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு 139 இடங்களில் வெற்றியும் பெற்றிருந்தது. வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய்யும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் தான் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ளார் நடிகர் விஜய். அங்கு அவரை பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் ஒரு நட்சத்திர விடுதியில் ரகசியமாகச் சந்தித்து 45 நிமிடங்கள் பேசியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்தும் விஜய்யின் அடுத்த தேர்தல் முடிவு குறித்தும் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே விஜய்யும், பிரஷாந்த் கிஷோரும் நேரில் சந்தித்து கொண்டதாகவும் அந்த சந்திப்புக்குக் காரணம் உதயநிதிக்கும் விஜய்க்கும் மிக நெருக்கமான தொழிலதிபர்தான் என்றும் அப்பொழுது தேர்தல் வேலையினால் நிறைய பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. 

    இந்த சந்திப்பில், பிரஷாந்த் கிஷோர் விஜய்யிடம் உங்களுக்கு தமிழகத்தில் நல்ல ரசிகர் பட்டாளம் உள்ளது, நீங்கள் இந்த உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக வெற்றி பெற்று உள்ளீர்கள், தொடர்ந்து அரசியலில் போட்டி போடுவதே பெரிய வெற்றிதான் என கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, தற்பொழுது பிரஷாந்த் கிஷோருக்கு மம்தாவைத் தவிர வேறு வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை என்றும், தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறார் என்றும், மேலும் இன்னும் இரண்டு வருடங்களுக்கு வேறு எந்த தேர்தலும் தமிழ்நாட்டுக்கு இல்லை என்பதால் இந்த சந்திப்பு அரசியலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார். 

    ஆனால், இந்த சந்திப்பு நடைபெறவே இல்லை என்று விஜய் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....