Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்அரசியலுக்கு வருவாரா பிரசாந்த் கிஷோர்? அடுத்த கட்ட திட்டம் தான் என்ன?

  அரசியலுக்கு வருவாரா பிரசாந்த் கிஷோர்? அடுத்த கட்ட திட்டம் தான் என்ன?

  பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரஷாந்த் கிஷோர், சம்பள அடிப்படையில் தொழில்முறை மற்றும் தேர்தல் ஆலோசகராக பல கட்சிகளுக்கு பணியாற்றி வந்தவர். கடந்த சில வாரங்களாக, தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்த பிரஷாந்த் கிஷோர், மக்களிடையே நேரடியாக செல்லும் காலம் வந்து விட்டது எனவும், நல்லாட்சி எனும் முழக்கத்தோடு மக்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  இதுபற்றி தனது ட்விட்டர் பதிவில், “ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும், என் தேடலானது கடந்த 10 வருட ரோலர்கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது! தற்போது, பிரச்சனைகளை நன்றாகப் புரிந்து கொள்ள உண்மைத் தலைவனாக, மக்களிடம் செல்லும் காலம் நெருங்கி விட்டது. நல்லாட்சிக்கான பாதைக்கு, மக்கள் செல்ல வேண்டிய நேரம் இது.” என்று பதிவிட்டுள்ளார்.

  இதனால், பிரஷாந்த் கிஷோர் புதிய கட்சியைத் துவங்க உள்ளதாகவும், அவரின் அரசியல் பயணம் பீகார் மாநிலத்தில் இருந்து தொடங்கும் என்றும் செய்திகள் வலம் வருகின்றன. அடுத்த வாரத்தில் செய்தியாளர் சந்திப்பு, அடுத்து செய்யவிருப்பதை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  பீகாரில் உள்ள போஜ்புரி பேசும் பகுதியைச் சேர்ந்தவர் தான் பிரஷாந்த் கிஷோர். தேர்தல் ஆலோசகராக, 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி என்ற இமேஜை, மக்களிடம் கொண்டு சேர்த்து பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்தவர். பிறகு, மத்தியில் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் வெற்றிக்கும் வழிவகுத்தார்.

  2021 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி, ஒரு தொலைக்காட்சிக்கு நேர்காணல் மூலம் பேட்டியளித்தார். இனி, நான் தொழில்முறை அரசியல் ஆலோசகராக இருக்கப் போவதில்லை என்று கூறினார் பிரஷாந்த் கிஷோர்.

  ஆனால் அடுத்தடுத்து, அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பது, இவர் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. ஆனால், இவர் அரசியலுக்கு வந்தால் வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவாரா என்பது சந்தேகம் தான். பிரசாந்த் கிஷோர் போன்ற தேர்தல் ஆலோசகர்கள், மக்களை சந்திப்பதாக கூறுவது, அரசியல் வெற்றிடத்தையே சுட்டிக்காட்டுகிறது. அரசியல்வாதியாக அவரால், சாதிக்க முடியுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

  அதே நேரத்தில், சமூக வலைதளத்தில் கிடைக்கும் லைக்குகள், வாக்குகளாக மாறாது என்பதையும் பிரஷாந்த் கிஷோர் அறிவார். இந்தியாவில் வெற்றியடையும் கட்சிகள், பிரபலமாக இருந்தாலும் கூட, 40-45 சதவிகித வாக்குகளைத் தாண்டுவதில்லை. 2019 இல், பாஜக 38% வாக்குகளைப் பெற்று, 300 இடங்களுக்கும் மேலாக வென்றது. ஆகையால், பிரஷாந்த் கிஷோர், ஒரு தலைவராக மாற வேண்டுமானால், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

  இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து உதவி : மக்கள் உதவக்கோரி முதல்வர் வேண்டுகோள்

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....