Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு முழுவதிலும் இன்று முதல் ஆரம்பமான மின் தடை

    தமிழ்நாடு முழுவதிலும் இன்று முதல் ஆரம்பமான மின் தடை

    தமிழ்நாடு முழுவதிலும் உள்ள துணை மின் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சீராக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முறையாக நடைபெறாததால் பல சிக்கல்கள் இருந்ததால் இதனை தடுக்க அரசு இந்த உத்தரவை வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.

    இந்த பராமரிப்பு பணிகளின்போது மின் கம்பங்கள், மின் சாதனங்கள் மற்றும் மின்வாரியத்தில் உள்ள இயந்திரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெறும் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம்.

    இருப்பினும் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்றதால் தேர்வு முடிவடையும் வரை மாணவர்களின் நலனுக்காக மின்தடை செய்யப்படாது என அரசு அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் நேற்று ஏப்ரல் 28 ஆம் தேதி அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை இன்று முதல் தொடங்கியுள்ளது.

    இதன் காரணமாக இன்று முதல் தமிழ்நாட்டில் வழக்கம் போல மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறும் எனவும் குறிப்பிட்ட பகுதிகளில் இனி மின்தடைகள் இருக்கும் எனவும் மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....