Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி' - ட்விட்டரில் கார்த்தியும் திரிஷாவும் உரையாடல்..

    ‘ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி’ – ட்விட்டரில் கார்த்தியும் திரிஷாவும் உரையாடல்..

    வந்தியத்தேவனாக நடித்த கார்த்தியும், குந்தவையாக நடித்த திரிஷாவும் ட்விட்டர் பக்கத்தில் கதாப்பாத்திரங்களாகவே மாறி பேசிக்கொண்ட உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளிவந்த படம், பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் 450-கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. 

    இதையடுத்து, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களுக்கு பதிலாக வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி பொன்னியின் செல்வன்-2 வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், இப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்த கார்த்தியும், குந்தவையாக நடித்த திரிஷாவும் ட்விட்டர் பக்கத்தில் கதாப்பாத்திரங்களாகவே மாறி பேசிக்கொண்ட உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    அதன்படி, கார்த்தி முதலில் ‘இளையபிராட்டி… hi’ என ட்விட் செய்ய, அதற்கு பதில் ஏதும் வராத காரணத்தினால் மீண்டும் அவரே ‘என்ன பதிலே இல்லை’ என ட்விட் செய்தார். இதைத்தொடர்ந்து,  ‘என்ன வாணர்குல இளவரசே?’ என திரிஷா பதில் கூற, ‘தங்கள் தரிசனம்  கிடைக்குமா?’ என  உரையாடலை ஆரம்பித்தார் கார்த்தி. 

    ‘ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்’

    ‘கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ?’

    ‘வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா ?’

    ‘ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி.  நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்….’ 

    என்று இருவரும் தங்களது ட்விட்டர் பக்கம் மூலம் உரையாடி வருகின்றனர். இன்று மாலை 6 மணியளவில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து அகநக எனும் பாடல் வெளியாகவுள்ளது.

    மேலும், கடந்த ஆண்டும் பொன்னியின் செல்வன் படம் வெளியாகும் முன் அப்படத்தின் நடிகர்கள் ட்விட்டரில் கதாப்பாத்திரங்களாக மாறி உரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது; இருவர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....