Saturday, March 16, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைகல்வெட்டுகளில் மறைக்கப்பட்ட பொன்னியின் செல்வன்: நீங்கள் அறிந்திராத கதையின் ரகசியம்...

    கல்வெட்டுகளில் மறைக்கப்பட்ட பொன்னியின் செல்வன்: நீங்கள் அறிந்திராத கதையின் ரகசியம்…

    தமிழில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய பத்திரிகையான கல்கியில் 1950ஆம் ஆண்டிலிருந்து சுமார் 3 ஆண்டுகளுக்கு எழுதிய வரலாற்று நாவல்தான் பொன்னியின் செல்வன்.

    பிற்காலச் சோழர்களில் புகழ்பெற்று விளங்கிய ராஜராஜசோழனின் தந்தையான சுந்தரசோழன் என்ற இரண்டாம் பராந்தகச் சோழனின் காலத்தில் நடந்த சில சரித்திர நிகழ்வுகளை மையப்படுத்தி, இந்த நாவலை கல்கி எழுதியிருந்தார். இந்த நாவலில் பல உண்மைப் பாத்திரங்களும் பல கற்பனைப் பாத்திரங்களும் இடம்பெற்றிருந்தன.

    பிரபல சரித்திர ஆசிரியர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய ‘The Cholas’ புத்தகமும் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் எழுதிய ‘History of the Later Cholas’ நூலையும் பயன்படுத்தியே இந்த நாவலை கல்கி உருவாக்கினார். ஆர். கோபாலனின் ‘Pallavas of Kanchi’ உள்ளிட்ட புத்தகங்களும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன.

    இந்த நாவலுக்காக சோழ நாட்டிலும் அதாவது தற்போதைய தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் இலங்கையிலும் பல பயணங்களை மேற்கொண்டார் கல்கி. அப்போது அவருடன் ஓவியரான மணியனும் உடன் சென்றார். பொன்னியின் செல்வன் கல்கி இதழில் வெளியானபோது, மணியனே ஓவியங்களை வரைந்தார். 2,400 பக்கங்களுக்கு மேல் நீளும் இந்த நாவல் 5 பாகங்களைக் கொண்டது.

    இப்படியாக பல சிறப்புகளை கொண்ட இந்த பொன்னியின் செல்வன் நாவல் தற்போது படமாக்கபட்டு… தமிழர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது…

    இந்த நாவலில் வரும் சம்பவங்கள் குறித்தும் அதில் வரும் கதாபாத்திரங்கள் குறித்தும் பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் உள்ளது… இதில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்ததா ? இதில் கூறப்படும் கதாபாத்திரங்கள் உண்மையில் வாழ்ந்தவர்களா ?

    என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்… !

    பொன்னியின் செல்வன்' கதை நாயகர்கள் - வந்தியத்தேவன்! - Tamilnadu Nowஎழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் சரித்திர புகழ்பெற்றது. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டுள்ள.

    இந்திய தொல்பொருள் ஆய்வு துறை சார்பில் எழுதப்பட்டுள்ள தென் இந்திய கல்வெட்டுகள் குறித்த புத்தகங்கள் மற்றும், தமிழ்நாடு தொல்லியில் துறை சார்பில் வெளியிட்டுள்ள கல்வெட்டு குறித்த புத்தகங்களில் இந்த கல்வெட்டுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

    வல்லவரையன் வந்தியத்தேவன் :

    பொன்னியின் செல்வன் கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவன் பெயர் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டினில் உள்ளது. வல்லவரையன் வந்தியத்தேவன் பற்றிய கல்வெட்டுகள் தஞ்சை பெரிய கோவில், பிரம்மதேசம்,குந்தவை ஜீனாலயம், விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோவில் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன

    குந்தவை :

    வந்தியத்தேவனின் மனைவியும் ராஜா ராஜா சோழனின் அக்கவுமான குந்தவை பிராட்டியார்..தஞ்சை பெரிய கோவிலுக்கு எண்ணற்ற பொன்னும் மணியும் அள்ளிக் கொடுத்ததுடன் தனது தாய் தந்தையான வானவன் மாதேவி மற்றும் சுந்தர சோழரது செப்புச் சிலைகளையும் செய்து கோவிலுக்கு அளித்துள்ளார்.

    குந்தவையை குறிப்பிடும் இடங்களிலெல்லாம் வல்லவரையர் வந்தியத்தேவர் மஹாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவை என்றே குறிப்பிடப்படுகிறார். இந்த ஒரு வரியை வைத்தே கதை நாயகனாக உருவாக்கி வந்தியத்தேவருக்கு அழியாப்புகழை அளித்து விட்டார் அமரர் கல்கி.

    கரிகாலச்சோழன் :

    வீரபாண்டியன் தலைக் கொண்ட கோப்பரகேசரியான ஆதித்த கரிகாலர் கல்வெட்டு குடந்தை நாகேஸ்வரன் கோவில் கல்வெட்டினில் உள்ளது.

    கல்வெட்டுகளில் வீரபாண்டியன் தலைக் கொண்ட கோப்பரகேசரி எனக் குறிப்பிடப்படும் ஆதித்த கரிகாலர் சுந்தர சோழரின் மூத்த மகனும் ராஜராஜர் மற்றும் குந்தவையின் அண்ணனும் ஆவார்.

    இளவரசராக பட்டம் சூட்டப்பட்ட பின் ஆறு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்த அவர் சோழ அரசின் உயரதிகாரிகளாக இருந்த சில பிரம்மராயர்களால் கொல்லப்பட்ட தகவலை உடையார்குடி அனந்தீஸ்வர் கோவில் கல்வெட்டு விளக்குகிறது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு குடமூக்கு என அழைக்கப்பட்ட கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் உள்ளது.

    ஆதித்த கரிகாலரரை கொன்ற துரோகிகளான சோமன், ரவிதாஸனான பஞ்சவன் பிரம்மாதிராஜன், அவன் தம்பி பரமேஸ்வரன் பிரம்மாதிராஜன், அவர்கள் உடன்பிறந்த மலையனூரான் ஆகியோரை முக்கியமாக குறிப்பிடுகிறது உடையார்குடி கல்வெட்டு.

    பொன்னியின் செல்வனில் பாண்டிய ஆபத்துதவிகளாகக் காட்டப்பட்டிருக்கும் சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியோர் உண்மையில் சோழப் பேரரசின் உயரதிகாரிகளாக இருந்தவர்கள்.

    ராஜா ராஜா சோழன் கல்வெட்டுகள் :

    அருண்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். ‘சோழ மரபினரின் பொற்காலம்’ என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கிமு. 985 முதல் கிமு.1014 வரையாகும்.

    தமிழக பேரரசுகளின் புகழ்பெற்ற ஸ்ரீ ராஜா ராஜா சோழனின் பெயர் அவரது இயற்பெயரான அருண்மொழி கல்வெட்டில் அருமொழி என்று தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டில் உள்ளது.

    மதுராந்தகன்( உத்தம சோழன் )

    இரண்டாம் பராந்தகரான சுந்தர சோழருக்குப் பின் ஆட்சிக்கு வருபவர் கண்டராதித்தர் குமாரனும் ராஜா ராஜா சோழன் சித்தப்பனுமான உத்தம சோழரே. அவர் சிம்மாசனம் ஏற ஆசைப்பட்டதால் ராஜா ராஜா சோழன் அரியணையை விட்டுக்கொடுத்ததாக திருவாலங்காடு செப்பேடு கூறுகிறது.

    இவரின் 15 ஆண்டுகால ஆட்சி முடிந்ததற்கு பிறகே ராஜா ராஜா சோழன் அரியணை ஏறி முடிசூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரங்களான நந்தினி, ஆழ்வார்கடியான் நம்பி , பூங்குழலி ஆகியோர் முழுக்க முழுக்க கல்கியின் கற்பனை கதாபாத்திரங்களே. நாவலுக்கு சுவாரசியம் சேர்ப்பதற்காக உண்மையும் கல்கியின் கற்பனையும் கலந்த கலவை தான்

    மேலும் பொன்னியின் செல்வன் நாவல் சில வரலாற்று சம்பவங்களையும் வரலாற்றில் வாழ்ந்த சோழ அரச குடும்பத்தை மைய படுத்தி எழுதப்பட்ட சில கற்பனைகளும் சேர்ந்த கதை மட்டுமே.

    அதில் கூறப்படும் சில சம்பவங்கள் மட்டுமே நடந்தவை!
    மற்ற அனைத்தும் உண்மையில் நடந்தவை கிடையாது.

    இதுபோன்ற சுவாரசியமான தகவலை அன்றாடம் தெரிந்துகொள்ள தினவாசல் செய்திகளோடு இணைத்திருங்கள் !

    இதையும் படிங்க: “காலம் போனதே தெரியவில்லை..பேரன்புக்கு நன்றி” – பகாசூரன் குறித்து செல்வராகவன் பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....