Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்துக் கொண்ட உதவி பேராசிரியர்- போராடும் மாணவர்கள்!

    கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்துக் கொண்ட உதவி பேராசிரியர்- போராடும் மாணவர்கள்!

    அரசுக்கல்லூரி உதவிப் பேராசிரியர் மாணவியிடம் தவறாக நடந்துக் கொண்டதால் அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டுமென அம்மாணவியுடன் படிக்கும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, உலகநாத நாராயண சுவாமி அரசு கல்லூரியில் படிக்கும் மாணவியிடம் உதவி பேராசிரியர் மகேந்திரன் என்பவர் தவறாக நடந்துக் கொண்டதால், அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் பலரும் கல்லூரி வாசல் முன்பு நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    உலகநாத நாராயண சுவாமி அரசு கலைக் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவியிடம், உதவிப் பேராசிரியர் மகேந்திரன் என்பவர் தவறாக நடந்துக்க கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் உதவிப் பேராசிரியர் மகேந்திரன், அம்மாணவியிடம் பேசிய ஆடியோ பதிவை வைத்து நேற்று, பொன்னேரியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர். 

    இதைக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மீண்டும் இன்று மாணவர்கள் ஒன்று திரண்டு உலக நாத சுவாமி நாராயண சுவாமி அரசு கலைக் கல்லூரி வாசலான பொன்னேரி- திருவொற்றியூர் சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் வேறு ஏதேனும் மாணவியிடம் தவறாக நடந்துக் கொண்டாரா என விசாரிக்க கோரியும் போராட்ட முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். 

    மேலும் முறையான விசாரணை நடக்கவில்லை என்றும், கல்லூரி நிர்வாகம் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தற்போது உள்ள சேகர் என்ற முதல்வரை மாற்றக் கோரியும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் பெண்கள் ஆண்கள் என அனைவரும் பங்கேற்று போராடி வருகின்றனர்.

    அந்த மாணவி, கடந்த வியாழக்கிழமை புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுக்கு புதிய ராணுவ தளபதி : ராணுவத்தின் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த இந்த தளபதி யார் ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....