Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பண்டிகை; அரசு பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு

    பொங்கல் பண்டிகை; அரசு பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்துகளில் இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

    பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 14 முதல் 17 ஆம் தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக வருகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கலை முன்னிட்டு, 13 ஆம் தேதி முதலே பொதுமக்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ள 4 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர்.  இந்நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை 1.62 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்திருப்பதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

    அதே சமயம் சென்னையில் இருந்து செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மாதவரம், கே.கே நகர், தாம்பரம், தாம்பரம் சானிடோரியம், கோயம்பேடு, பூந்தமல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    சிறப்பு பேருந்து குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள மற்றும் புகார் அளிக்க 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். அதே போல், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 4256 151, 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 என்ற எண்களை அழைத்து புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், 18,000 ஊழியர்கள் நீக்கம் – அமேசான் எடுத்த அதிரடி முடிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....