Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசட்டப்பேரவையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் புதுச்சேரியில் பரபரப்பு!

    சட்டப்பேரவையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் புதுச்சேரியில் பரபரப்பு!

    புதுச்சேரி அரசைக் கண்டித்து தலித் மற்றும் பழங்குடி இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் சட்டப் பேரவை வாசலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. 

    எஸ்சி எஸ்டி சிறப்புக் கூறு துணைத் திட்டத்தின் நிதியை முழுமையாக செலிவிடாதது ஏன் எனக் கண்டித்தும் இந்த ஆண்டுக்கான சிறப்புக் கூறு நிதியை முழுமையாக செலவிடக் கோரியும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசம் என்பதெல்லாம் செண்டாக்கில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே கிடையாது அனைவருக்கும் வழங்கப்பட வேண்டியும் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

    மேலும் நிதியை முழுமையாக செலவிடாத அதிகாரியின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் போடப்பட்டது. 

    முன்னதாக அண்ணா சிலையில் தொடங்கி சட்டப்பேரவையை முற்றுகையிட்டதும் காவல்துறையினர் தடுக்க முயற்சித்தனர். தடுப்புகளை மீறியும் சிலர் சட்டப்பேரவை வாயிற்கதவை முற்றுகையிட்டு போராட்ட  முழக்கங்களை எழுப்பினர்.இதனால், சட்டப்பேரவை தலைவர்கள் உள்ளிருந்து கதவை மூட உத்திரவிட்டனர். மேலும் காவல் துறையினர் தடுத்தும் போராட்டம் மேற்கொண்டதால், காவல் துறையினர் dalit and tribe protest வலுக்கட்டாயமாக முட்டி மோதித் தள்ளினர். பின்னர், காவல் துறையினர் 100 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைக் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்புடன் இருந்தது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....