Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சோனியா மற்றும் ராகுலுடன், பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு - தேர்தல் வியூகமா?

    சோனியா மற்றும் ராகுலுடன், பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு – தேர்தல் வியூகமா?

    அரசியல் வட்டாரங்களில் மிகவும் பிரபலமான அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், வரும் தேர்தலில் அரசியல் ஆலோசகராக மட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சியிலும் இணைந்து பணியாற்ற உள்ளார் என்ற தகவல் சமீபகாலமாகவே வெளியாகி வந்தது. இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளதால் அரசியல் வட்டாரம் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. 

    45 வயதாகும் இந்த பிரஷாந்த் கிஷோர் தான் இன்றைய இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சிகளின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய நபர் ஆவார். இவருடைய அரசியல் பயணம் வெற்றியை நோக்கி ஓட ஆரம்பித்தது 2012ஆம் ஆண்டில் இருந்து தான். அரசியல் வியூக உத்தி வகுப்பாளரான இவரின் முதன்மை வேலை அரசியல் கட்சிகளுக்கு வியூகங்கள் வகுத்து கொடுத்து அவற்றை வெற்றி பெறச் செய்வதே ஆகும். 

    அப்படித்தான் தன்னுடைய அற்புதமான வியூகங்கள் மூலம் பாஜகவை 2012ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறச்செய்தார். அதன்பின் அவரின் தொழில்முறை வாழ்க்கை ஏறுமுகம் கண்டது. மிகப்பெரிய சவாலாக 2014ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. எல்லோருக்கும் அப்போழுது ஏற்பட்ட மோடி அலை நியாபகத்துக்கு வரலாம். அந்த அலையை உருவாக்கி நரேந்திர மோடியை பிரதமராக்கியவர் இவர் தான். அதன்பின்பு 2015ல் ஜனதா தல் கட்சியை பீகாரிலும், 2017ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசை பஞ்சாபிலும் வெற்றி பெற வைத்தார். 

    அதோடு இவரின் பயணம் நின்று விடவில்லை.  அதன்பின்பு உத்தரபிரதேசத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்யும் முயற்சியில் தோல்வியைத் தழுவினார். அதன்பின்பு, 2019ஆம் ஆண்டு ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியையும், 2020ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியையும், 2021ஆம் ஆண்டு மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் இவர் வெற்றி பெற வைத்தார். 

    இது எல்லாவற்றையும் விட தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தை வெற்றி பெறச் செய்தவரும் இவர்தான். இப்படி இன்று இந்தியாவின் பல்வேறு ஆட்சியாளர்களை வெற்றி பெறச்செய்த கிங் மேக்கர் தான் இந்த பிரஷாந்த் கிஷோர். இதன் விளைவாக வரவிருக்கும் நாடளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்காக பணியாற்ற இவர் பணியாற்றப் போகிறார் என்ற ஆர்வம் பலரிடத்திலும் அதிகரித்து வருகிறது. 

    சமீபத்தில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார் என்ற தகவல் பலரிடமும் பரவியது. ஆனால், இருதரப்பும் முற்றிலுமாக மறுத்தது. அதே சமயத்தில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த வருடத்தின் இறுதியில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் வர இருக்கிறது. அதற்குள் கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. 

    இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசியுள்ளார் பிரஷாந்த் கிஷோர். அவர் கட்சியில் இணைந்து தேர்தல் பணியாற்ற போகிறார் என்ற தகவல் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....