Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்13 ஆண்டு காலமாக தாயின் உடலை மம்மியாக மாற்றி பாதுகாத்த மகன்.. போலந்தில் அதிர்ச்சி

    13 ஆண்டு காலமாக தாயின் உடலை மம்மியாக மாற்றி பாதுகாத்த மகன்.. போலந்தில் அதிர்ச்சி

    13 ஆண்டு காலமாக தாயில் உடலை அவர் பல்வேறு ரசாயனங்களைப் பயன்படுத்தி மம்மி போன்று பதப்படுத்தி வந்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். 

    போலாந்து நாட்டில் உள்ள ராட்டிலின் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி 76 வயதான மரியானை சந்திக்க அவரது உறவினர் வீட்டிற்கு திடீரென வருகைத் தந்துள்ளார். அப்போது மரியான் பைத்தியம் போல் வீட்டிற்கு வெளியே அலைந்து திரிவதை கவனித்திருக்கிறார். 

    இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டு சோஃபாவில் மம்மியாக்கப்பட்ட உடல் வைக்கப்பட்டு அதன் மேலும் கீழும்  2009-ஆம் ஆண்டு செய்தித்தாள்களை குவியலாக வைக்கப்பட்டிருந்தது. அந்த உறவினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க போலீசார் உடனே வந்து ராட்லினின் ரோகோஸினாவிலுள்ள மரியானின் வீட்டிற்குச் சென்ற போலீசார் மம்மியாக்கப்பட்ட உடலைக் கைப்பற்றினர். 

    தொடர்ந்து வீட்டின் உரிமையாளரான மரியானை துணை மருத்துவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் போலீசார் தெரிவித்திருக்கின்றனர். 

    சோஃபாவில் வைக்கப்பட்டிருந்த மம்மி உடலானது 95 வயதில் 2010ஆம் ஆண்டு இறந்த, மரியானின் தாயின் உடல் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 13 ஆண்டு காலமாக தாயில் உடலை அவர் பல்வேறு ரசாயனங்களைப் பயன்படுத்தி பதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    தாயில் உடலை கல்லறையில் இருந்து தோண்டி எடுத்து வந்து அதை மம்மி போல மாற்றி வீட்டில் மரியான் வைத்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இறந்த தாயின் உடலை கல்லறையில் இருந்து எடுத்து வந்த குற்றத்திற்காக மரியான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதேநேரம் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் அவரை மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்; பாலியல் தொல்லை காரணமாக கலாஷேத்ரா மாணவர்கள் திட்டவட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....