Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை; பிரதமர் மோடி திறந்து வைப்பு

    கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை; பிரதமர் மோடி திறந்து வைப்பு

    பிரதமர் மோடி கேரளாவில் முதல் முறையாக வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். 

    பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக இவர் நேற்று மாலை மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலமாக கொச்சிக்கு வந்தடைந்தார். கேரள மாநில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக வேட்டி சட்டையுடன் வந்த பிரதமர் மோடியை அம்மாநில மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். 

    அதே சமயம், பிரதமர் மோடியை பாஜக கட்சியினரும் உற்சாகமாக வரவேற்றனர். பிரதமர் மோடியும் அவர்களை பார்த்து கைகளை அசைத்தபடி சென்றார். 

    இரண்டாவது நாளாக இன்றும் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். அதன்படி, அவர் நாட்டின் முதல் தண்ணீரில் இயங்கும் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்தார். மேலும் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். 

    இந்த விழாவில் கேரள ஆளுநர் மற்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பிரபல இயக்குநர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....