Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி..

    பாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி..

    பிரபல இந்திய பாடகியான லதா மங்கேஷ்கர் பல வருடங்களாக ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, தொடர்ந்து முன்னணி பாடகியாக திகழ்ந்து வருகினறார். பெரும்பான்மையாக இவர் பாடிய அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டன. இவருக்கு  இந்திய உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

     கடந்த ஜனவரி 8-ம் தேதி  பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா, நிமோனியா காய்ச்சல் இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றிருந்த நிலையில் அவரை  பரிசோதித்த மருத்துவர்கள் லதா மங்கேஷ்கர்  உடல்நிலை கொஞ்சம் தேறி வருவதாகவும், வெண்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகள் நீக்கப்பட்டதாகவும் கடந்த  சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தனர். அவரது உடல் தொடர்ந்து ஒத்துழைப்பு தருவதாக மருத்துவர்கள் கூறி வந்த நிலையில் நேற்று முன்தினம் தீடிரென்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதனை தொடர்ந்து அவருடைய உறுப்புகள் தொடர்ந்து செயலிழந்து வந்ததால் நேற்று லதா மங்கேஷ்கர் உயிரிழந்ததாக மருத்துவக் குழு அறிவித்தது. 

    ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எல்லாரும் தொடர்ந்து தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நேற்று மாலை மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கரின் வீட்டிலிருந்து அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

     வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிவாஜி பார்க்கில் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மும்பை சென்று  லதா மங்கேஷ்கரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். 

     

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....