Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடங்கள் ??

    சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடங்கள் ??

    சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க சென்னையை சுற்றியுள்ள 4 இடங்களை மாநில அரசு தேர்வு செய்து விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

    minister

     மக்களவையில் சென்னை விமான நிலையம் பற்றி கேள்வி எழுப்பிய பொழுது விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில் விமான கட்டுமானத்திற்கு ஏற்ற சுற்றுசூழலைக்  கொண்டிருக்கிறதா என்று ஆராய்ந்து அதற்கான இடங்களை தேர்ந்தெடுப்பதாக கூறினார். 

    plane

    அதன்படி  சென்னையில் பரந்தூர், பண்ணூர், திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்களை மாநில அரசு தேர்வு செய்துள்ளது என்றார். திரிசூலத்தில் ஏற்கெனவே உள்ள சென்னை விமானநிலையத்திற்கு திருப்போரூர் மிக அருகில் உள்ளதால், இந்த இரு பகுதிகளுக்குமான பயண நேரம் ஒரு மணி நேரத்தை விட குறைவுதான். ஆனால் பண்ணூர் மற்றும்  படாளத்திற்கு திரிசூலத்தில் இருந்து செல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் தேவைப்படும்.

    பரந்தூர், திரிசூலத்திலிருந்து தொலைவு என்பதால் பயண நேரம் இரண்டு மணி நேரமாகவும். கொரோனா தொற்றுக்கு முன்னர் திரிசூலம் விமானத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்க நெரிசல் ஏற்பட்டது. பயணிகளும் இந்த நெரிசலில் சிக்கினர். இதனால் அதிகாரிகளால் போக்குவரத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டாலும், இறுதி செய்வதில் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இருந்தது.

    chennai

    இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் பரந்தூர், பண்ணூர், திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கலாம் என இந்திய விமான நிலைய ஆணையத்திடம் மாநில அரசு தெரிவித்தது. இதையடுத்து இந்த 4 இடங்களையும் விரைவில் விமானத்துறை அதிகாரிகள் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சாத்தியக்கூறுகளை ஆராயவுள்ளன.

    flight

    புதிய விமான நிலையம் அமைப்பதற்கு உள்கட்டமைப்பிற்கு தேவையான அனைத்தையும் அமைக்க போதிய இடம் இருக்கிறதா என்பதை முக்கியமாக  ஆய்வு செய்வார்கள். தாம்பரத்தில் உள்ள இந்திய விமான படை போக்குவரத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் உள்ளதா என்றும், வேறு ஏதேனும் தடைகள் இருக்கின்றதா என்பதையும் உறுதி செய்யப்பட்ட பின்னர் இடம் இறுதி செய்யப்படும் என தெரிவித்தனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....