Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு

    பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு

    விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகிற மே மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இயக்குநர் சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்தத் திரைப்படம் மிக பெரிய அளவில் மக்கள் இடையே வரவேற்பை பெற்றது. 

    பிச்சைக்காரன் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, பிச்சைக்காரன் 2 ஆம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கியும் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பானது மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாக உள்ளது. 

    இந்நிலையில், பிச்சைக்காரன் திரைப்படத்தின் 2 ஆம் பாகம் வருகிற மே மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. 

    இதனிடையே, பிச்சைக்காரன் 2 திரைப்பட போஸ்டர் ஒன்றை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    தமிழ்நாட்டில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கூடாது-பாமக தலைவர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....