Tuesday, March 19, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்நெட்டிசன்களின் கேலிக்கூத்துக்கு இரையான கூகுள் க்ரோம்!

    நெட்டிசன்களின் கேலிக்கூத்துக்கு இரையான கூகுள் க்ரோம்!

    உலகின் பல முன்னனி நிறுவனங்களும் குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு அல்லது அவர்களுக்கு ஏற்ற சமயத்தில் தங்களின் நிறுவனங்களின் லோகோவை மாற்றுவது வழக்கமான ஒன்றுதான். மேலும் இது உலகின் முன்னனி நிறுவனங்கள் மட்டும்தான் செய்யுமா என்றால் நிச்சயம் இல்லை. அனைத்து நிறுவனங்களும் தங்களின் விருப்பத்தின் பெயரில் லோகோ மாற்று நிகழ்வை அரங்கேற்றுவர்.

    அவ்வகையில்தான், கூகுள் நிறுவனமும் தனது  க்ரோம் உலாவியின் (browser) லோகோவை மாற்ற முன்வந்துள்ளது. ஆம்! கூகுள் நிறுவனத்தின் க்ரோம் உலாவியின் (browser) லோகோ சுமார் எட்டு வருடங்களுக்கு பிறகு மாறவிருக்கிறது. 

    chrome-logo-change-2022

    இறுதியாக, 2014 ஆம் ஆண்டு கூகுள் க்ரோம் தனது லோகோவை மாற்றியது, அதன்பிறகு தற்போதுதான்  கூகுள் க்ரோம் லோகோவில் மாற்றம் நிகழ இருக்கிறது. 

    அதன்படி, கூகுள் நிறுவனம் தற்போது தனது லோகோவில் செய்துள்ள அப்டேட்டுகள் நெட்டிசன்கள் மத்தியில் கேலிக்கூத்துக்கு உள்ளாகியுள்ளது. கேலிக்கு காரணம் என்னவென்றால், முந்தைய கூகுள் க்ரோம் லோகோவிற்கும், தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள க்ரோம் லோகோவிற்கும் வித்தியாசங்கள் தெரியவில்லை என்றும், இப்படி ஒரு அப்டேட் தேவைதானா என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

     

    ஆனால், கூகுள் குரோம் வடிவமைப்பாளரான எல்வின் ஹு தனது ட்விட்டர் பக்கத்தில், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் சில நிழல்களை ஒருவருக்கொருவர் அடுத்ததாக வைப்பது விரும்பத்தகாத வண்ண அதிர்வுகளை உருவாக்கியது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, கஐகானுக்கு மிகவும் நுட்பமான மாற்றத்தை மட்டுமே தங்களின் குழு அறிமுகப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், கணினி ஐகான்களை நிறைவு செய்ய இது மிகவும் வண்ணமயமாக இருக்கும், ஆனால் macOS இல், லோகோவில் ஒரு சிறிய நிழல் இருக்கும். அவை இம்முறை நீக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    santhanam comedy scene

    ஏற்றுக்கொள்ளும்படியான விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், நெட்டிசன்கள் கேலி செய்வதை விடுவதாய் இல்லை. ‘ இதுக்கு பருத்தி மூட்டை, குடோனிலே இருந்திருக்கலாம்’ என்றும், முந்தைய மற்றும் தற்போது லோகோக்களை காண்பித்து ‘ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கவும்’ என்றும் கேலி செய்து வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....