Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்மக்களை பதற்றமடைய வைத்து தொடர் ஏறுமுகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை! இந்நிலை நீடிக்குமா?

    மக்களை பதற்றமடைய வைத்து தொடர் ஏறுமுகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை! இந்நிலை நீடிக்குமா?

    சில நாட்கள் முன்பு வரை ஏதோ கொஞ்சம் போராடினால், நடுத்தர மக்கள்  தங்க நகைகளை கொஞ்சம் வாங்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இன்றோ அப்படி ஒரு நிலை இருந்ததற்கான அடையாளம் ஏதுமின்றி காணப்படுகிறது, தங்கத்தின் விலை!

    gold

    உக்ரைன் நாட்டில் நிலவும் பிரச்சினைகள், சர்வதேச சந்தையின் நிலை,  மக்களின் வாங்கும் திறன் போன்ற காரணிகள் தங்கத்தின் விலையை ஏற்றமடைய செய்ததாக கூறுகின்றனர், பொருளாதார வல்லுநர்கள்! மேலும், இந்த ஏற்றமானது வருங் காலங்களில் தொடரும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால், மக்கள் சற்றே பதட்டமடைந்து உள்ளனர். 

    சென்னையில் இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  4,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்திருக்கிறது.

    gold buy

    ஒரு கிராம் தூயத் தங்கம் 5,138 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 41,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தூயத் தங்கம் நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு 424 ரூபாய் அதிகரித்து காணப்படுகிறது.

    ஒரு கிராம் வெள்ளி 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 68,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி நேற்றைய விலையை விட கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....