Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என மக்கள் குமுறல் - முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு

    கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என மக்கள் குமுறல் – முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு

    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே  தங்கள் கோரிக்கைகளை முதலமைச்சர் சந்தித்து மனு கொடுக்க சென்ற கிராம மக்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ship

    திருவள்ளூரில் காட்டுப்பள்ளி குப்பம் பகுதியில் கப்பல் கட்டும்  நிறுவனம் அமைப்பதற்காக அப்பகுதி மக்களுக்கு வேறு இடத்தில் வீடு கட்டிstrike தருவதாகவும், மேலும் இந்த கப்பல் நிறுவனத்திலே பணி  அமர்த்தி தருவதாகவும், 140 பேருக்கு அந்நிறுவனத்தில் நிரந்திர வேலை தருவதாக கூறி இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை  பணி  நிரந்திரம்  செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து தங்களின் கோரிக்கையை தெரிவிப்பதற்காக முதலமைச்சரை சந்திக்க பொது மக்கள் மினி வேன் மூலம் புறப்பட்டனர்.இதனையறிந்த காவல் துறையினர் அவர்களை தடுத்தி நிறுத்தி மாவட்ட ஆட்சியர் மூலம் தீர்வு காணப்படலாம் என்று கூறியிருந்தனர்.

    police

    இதனை நம்பி 4மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வராததால் காவலர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் தன்னை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நேரில் சந்திப்பவர்களை காவலர்களை கொண்டு தடுப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

    people

    அவர்களின் வாழ்வாதாரத்திற்காக மனு கொடுக்க வந்த பொது மக்களை காவல் துறையினர் தடுத்ததால் முதலமைச்சரை சந்திக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.   இதனால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சியின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....