Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஆன்மிகம்மதுரை திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா கோலாகலம்!

    மதுரை திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா கோலாகலம்!

    மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் ஆண்டுத் தோறும் பங்குனி திருநாள் அன்று இந்தப் பங்குனிப் பெருவிழாவில் கைப்பார உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். 

    திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். மேலும் 5 ஆம் நாளான நேற்று அங்குள்ள கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் திருவிழாவாக கைப்பார உற்சவ திருவிழா விளங்கி வருகிறது. 

    மேலும் சிறப்பம்சமாக கைப்பார உற்சவ திருவிழாவில் அக்கோவிலில் உள்ள மிகப் பெரிய வெள்ளி யானையை அந்தக் கிராமத்து மக்கள் தங்களின் உள்ளங்கைகளில் சுமந்தபடி தூக்கிச் செல்வர். இந்திரனின் வெள்ளி யானையில் முருகனும் தெய்வானை அம்மையும் அமர்ந்து உலா வரும் நிகழ்வாக இத்திருவிழா கொண்டாப்படுகிறது. மேலும் முருகனும் தெய்வானையும் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அலங்காரத்தில் நேற்று தோன்றினர். murugan theivanai thiruparankundram

    கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அப்பகுதி கொத்தாளத்து கிராம மக்கள் வெள்ளி யானையை திருக்கோவிலில் இருந்து தூக்கி வீதி வரை எடுத்து வந்தும் பிறகு வீதியிலுருந்து கோவில் வரை தாங்கி வந்தும் வீதி உலாவை சிறப்பித்தனர். மேலும் கடந்த ஆண்டில் பெருந்தொற்றின் காரணமாக பக்தர்களை அனுமதிக்காமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் முருகனையும் தெய்வானையையும் தரிசித்தனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....