Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பொருளாதாரச் சிக்கலில் பாகிஸ்தான் : பறிபோகிறதா இம்ரானின் பிரதமர் பதவி ?

    பொருளாதாரச் சிக்கலில் பாகிஸ்தான் : பறிபோகிறதா இம்ரானின் பிரதமர் பதவி ?

    பாகிஸ்தானில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் பிரதமர் பதவி விலகக்கோரி அந்நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றிவுள்ளனர். 

    பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து அங்குள்ள ஏழை மக்கள் பொருளாதார சிக்கலில் சிக்கி கஷ்டப்பட்டு வருகின்றனர். அங்கு, தற்போதைய பிரதமர் இம்ரான் கானின் புகழ் குறைந்து அவரின் நிர்வாகத்திறமையை அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இம்ரான்கானை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் தலைவர் மௌலானா பாஸ்ல்-உர்-ரஹ்மான் இந்த இம்ரானுக்கு எதிரான இந்த தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார். இதற்கான ஆலோசனை கூட்டம்  சிலநாட்களுக்கு முன்புதான் லாகூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

    மேலும், பேசிய அவர் ஆளும் பிடிஐ கட்சியின் கூட்டணி கட்சிகளைத் தொடர்பு கொண்டு இது குறித்து பேச உள்ளோம் என்றும், அவர்களிடம் இந்த நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களைக் காப்பாற்ற இம்ரான் கானுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துங்கள் என கேட்டுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். 

    பாகிஸ்தான் சட்டப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட அதிகபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே போதும். அங்கு மொத்தம் 342 பதவியிடங்கள் உள்ளன, அதில் 172 பேர் இதற்கு ஆதரவு அளித்தாலே தீர்மானம் நிறைவேறிவிடும். அங்கு ஆளும் பிடிஐ கட்சி 155 இடங்களுடன் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது. எனவே, இந்த தீர்மானம் நிறைவேற பிடிஎம்மின் தலைவர், பிடிஐயின் ஆதரவு கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும். 

    பாகிஸ்தான் முஸ்லீம் லீக் குவாய்த்-இ-ஆஸாம் மற்றும் முத்தஹிதா குவாமி இயக்கம் ஆகியவை பிடிஐ கட்சியின் ஆதரவு கட்சிகளாக இருந்து வருகின்றன. சமீப காலங்களில் தங்களுக்கு சேர வேண்டிய உரிமைகளை பிடிஐ தரவில்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தன. தற்பொழுது, இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் இந்த கூட்டணி கட்சிகளின் கையில்தான் பாகிஸ்தானின் அதிகாரம் யாரிடம் செல்ல போகிறது என்ற கேள்விக்குப் பதில் உள்ளது. 

    ஆனால், தற்பொழுது அங்கு உள்ள கூட்டணி கட்சிகள் பிடிஐக்கும் ஆதரவாக உள்ளன. அதே நேரத்தில் எதிர்கட்சிகளுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றன. இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில் PDM-Lன் தலைவர் ஷபாஸ் ஷெரிப் பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லாகூரில் PDM-Q கட்சிக்கு தன்னுடையத ஆதரவைத் தெரிவித்து உள்ளார். பிடிஐ கட்சியின் கூட்டணியில் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. 

    சமீபத்தில் பிலாவல் புட்டோ சர்தாரி தலைமையில் நடைபெற்ற மக்கள் பேரணி 10 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டு இஸ்லாமாபாத்தை வந்தடைந்தது. அதில் பேசிய அவர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும், இல்லையெனில் மக்களால் நீக்கப்படுவார் என எச்சரித்து இருந்தார். 

    பாகிஸ்தானின் இந்த நிலைமையைப் பார்க்கையில் விரைவில் அங்குள்ள அரசியலில் ஒற்று மிகப்பெரிய பிரளயம் வெடிக்க உள்ளது என்பது மட்டும் தெரிகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....