Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பாகிஸ்தானின் புதிய பிரதமர் தேர்வு: யார் அவர்? அவரின் பின்னணி என்ன?

    பாகிஸ்தானின் புதிய பிரதமர் தேர்வு: யார் அவர்? அவரின் பின்னணி என்ன?

    பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பான முறையில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வந்த நிலையில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    இம்ரான்கானுக்கு அமைச்சர்களின் ஆதரவு குறைந்து பதவி பறிபோன நிலையில் எந்தவித வாக்கெடுப்புகம் நடத்தாமல் ஆட்சி கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை நாடாளுமன்றம் தானாக வந்து விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்றம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்திரவிட்டது. இதன் பேரில் நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கள் வாக்கினை பிரதமர் பதவிக்காக நின்றவர்களுக்கு அளித்தனர். 

    அப்படி பார்க்கும் போது முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரான ஷெபாஷ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் பூர்விகத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் ஷெபாஷ் ஷெரிப். நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் தான் ஷெபாஷ் ஷெரிப். 1964 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது காஷ்மீரில் இருந்து இவர்களின் தந்தை பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு சென்றனர். 

    1988 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக நவாஸ் ஷெரிப் தேர்வான போது அப்போதைய சட்டமன்ற தலைவராக ஷெபாஷ் ஷெரிப் தேர்வானார். இதையடுத்து 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

    நவாஸ் ஷெரிப் பிரதமராக இருந்த போது 1997 ஆம் ஆண்டு இவர் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். மேலும் 1999 ஆம் ஆண்டு இராணுவ புரட்சியினால் நவாஸ் ஷெரிப் ஆட்சி கலைந்ததால், ஷெபாஷ் ஷெரிப் சவூதி அரேபியா நாட்டிற்கு சென்று 8 ஆண்டுகள் தனது குடும்பத்துடன் தங்கி  இருந்தார். இருப்பினும் இவர் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து ஓயவில்லை என்றே கூறலாம். 

    பிறகு 2008 ஆம் ஆண்டு மீண்டும் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியை தனதாக்கினார். இவரின் அண்ணன் ‘பனாமா பேப்பர்ஸ்’ வழக்கில் சிக்கியதால் இவர், முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரானார். மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தோற்றது குறிப்பிடத்தக்கது. 

    இருப்பினும் இம்ரான் கான் ஆட்சிக் கவிழ்ந்ததும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக, 174 வாக்குகள் ஷெபாஷ் ஷெரிப் பெற்றதால்  நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தானின் பிரதமர் ஆனார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....