Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மீண்டும் இந்தியாவுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் பிரதமர்- என்ன சொன்னார் தெரியுமா?

    மீண்டும் இந்தியாவுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் பிரதமர்- என்ன சொன்னார் தெரியுமா?

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று நடந்த பொது கூட்டம் ஒன்றில் இந்தியாவை புகழும் படியான கருத்துக்களை குறிப்பிட்டார். 

    கடந்த வாரங்களில் பாகிஸ்தானின் அரசியல் மாற்றங்கள் அடுத்தடுத்து புது விதமான சுவாரசியங்களை தந்தது. இருப்பினும் இம்ரான் கானின் பதவி பறிப்போனது. பாகிஸ்தானின் நிதி நெருக்கடிக்கு இவர் தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. மேலும் துணை சபாநாயகர், வாக்கெடுப்பு நடத்தாமல் இம்ரான் கானின் ஆட்சி கலைக்கப்பட்டதாக அறிவித்தார்.

    இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம், “வாக்கெடுப்பு நடத்தாமல் ஆட்சியை கலைக்க முடியாது. அப்படி அறிவித்தது முற்றிலும் தவறு. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அடிப்படையில் முறையான வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தது. [நீதிமன்ற உத்தரவு வரும் முன்தினம் தான் இந்தியாவைப்பற்றி மிகவும் பெருமையாக, “இந்தியாவில் எந்த வல்லரசு நாடுகளினாலும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தாது” என்று இம்ரான் கான் பேசினார் என்பது குறிப்பிடத்த ஒன்றாகும். அப்போது அவர் பிரதமாராக இருந்தார்]

    இதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 174 வாக்குகள் பதிவாகின. இதனால், இவரின் ஆட்சி கலைந்தது. இதன் பேரில் புதிய பிரதமருக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஷெபாஷ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டார். லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்  இம்ரான் கூறியது என்னவென்றால், இது போல் ஒரு கூட்டத்தை தான் கண்டதில்லை எனவும் வெளிநாட்டு சதியினால் தான் தனது ஆட்சி கலைந்ததாகவும் கூறினார். 

    பின் இந்தியாவை பற்றி மிகவும் பெருமையாக பேசினார். வெளிநாட்டு நலனுக்கு முன்னதாக இந்தியா, தனது நாட்டின் மக்கள் நலன் தான் முக்கியம் என்று இருக்கிறது எனவும் அமெரிக்காவிடம் நல்லுறவு கொண்டிருந்தாலும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை வாங்குகிறது. ரஷ்யாவின் எண்ணெய்யை வாங்க கூடாது என்று அழுத்தம் கொடுக்கப்பட்டும் இதில் இந்தியா தனது நாட்டு மக்களின் நலனுக்காக முடிவை எடுத்துள்ளது என்று பேசினார். 

    மேலும் அவர் பாகிஸ்தானில் உடனடி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, அவர்கள் நாட்டு மக்களின் நலனில் கவனம் செலுத்துகிறது எனவும் ஆனால், பாகிஸ்தானிலோ பிற நாடுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும் நமது எதிரிகளும் அதை விரும்பவில்லை, நாம் சீனாவுடன் வைத்திருக்கும் உறவையும் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். 

    இந்த பேச்சின் மூலம் இந்திய நாட்டு மக்களின் கவனத்தை இம்ரான் கான் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படியுங்கள், ரஷ்யா வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு: மேலும் பதற்றத்தில் உக்ரைன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....