Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இனியாவது மாணவர்கள் நலனில் அக்கறை காட்டுமா திமுக அரசு? ஓபிஎஸ் தடாலடி பதிவு!

    இனியாவது மாணவர்கள் நலனில் அக்கறை காட்டுமா திமுக அரசு? ஓபிஎஸ் தடாலடி பதிவு!

    2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக முதலாமாண்டு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற நிலையில், அந்த மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வினை இந்த மாதம் 21-ஆம் தேதி முதல் நேரடியாக நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பது கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஓ.பன்னிர் செல்வம் அவர்கள், பெரும்பாலான கல்லூரிகளில் முதல் பருவத்திற்கான நேரடி வகுப்புகள் 50 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டதாகவும், நவம்பர் மூன்றாவது வாரத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் அனைத்து மாணவர்களும் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக படிக்க வற்பறுத்தப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் உடனடியாக முதல் பருவத் தேர்விற்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டடதாக அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் பதிவு செய்தார்.

    கொரோனா விழிப்பு மையமாக செயல்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் நிலைமை இதைவிட மோசமானது என்றும், அவர்களுக்கு 40 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறதாக ஓ.பன்னிர் செல்வம் அவர்கள் தெரிவித்தார்.

    மேலும், கொரோனா கொடுந்தொற்று காரணமாக, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவியர் எழுதாத சூழ்நிலையில், முதலாமாண்டு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வகுப்பறைகளில் படிப்பதற்கு போதுமான நேரம் தரப்படாத சூழ்நிலையில், அவர்களுக்கு நேரடித் தேர்வினை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருப்பது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாகவும், உதவித் தொகையை சார்ந்திருக்கும் ஏழை எளியவர்களுக்கு இது கடினமான தருணம் என்றும் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளதாக தன் அறிக்கையில் ஓ.பன்னிர் செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கான எட்டாம் பருவத் தேர்வைத் தவிர அனைத்து பருவத் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்த சூழ்நிலையில், அனைத்து பருவத் தேர்வுகளும் வகுப்பறைகளில் நடத்தப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற கருத்தையும் அவர் முன் வைத்தார்.

    அதோடு, “பருவத் தேர்வுகளை ஒரு மாதத்திற்கு தள்ளிவைத்து, ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டுமென்றும் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ள சூழலில் நேரடி பருவத் தேர்விற்கு தயாராவதற்குத் தேவையான கால அவகாசம் மாணவ, மாணவியருக்கு இல்லாத நிலையில், பொறியியல் பயிலும் மாணவ, மாணவியரின் முதல் பருவத் தேர்வினை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கவும், தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டு, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசிற்கு உண்டு. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்துத் தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து,நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துவதாக ஓ.பன்னிர் செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....